பின்பற்றுபவர்கள்

புதன், 2 ஏப்ரல், 2014

சொந்த மாமனுக்கும் ஒரு பெண்ணிருந்தால்

டி எம் எஸ், L R  ஈஸ்வரியுடன் இணைந்த பாடல்கள் எல்லாமே ஒரு வித்தியாசமான கலகலப்புடன் இருக்கும்.
இந்த வயதிலும் டி எம் எஸ் அவர்களின் பாடும் விதம்.... நிச்சயம் அவர் நமக்கு ஒரு வரப்பிரசாதம்தான்.


திரைப் படம்: எங்க பாப்பா (1966)
குரல்கள்: டி எம் எஸ், L R  ஈஸ்வரி
நடிப்பு: ரவிசந்திரன் & பாரதி
இசை : M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P R பந்துலு



http://asoktamil.opendrive.com/files/Nl8zNTIyMTg2OF9rTkNta19hY2Ri/Sontha%20maamanukkum.mp3










சொந்த மாமனுக்கும்
சொந்த மாமனுக்கும்
ஒரு பெண்ணிருந்தால் 
ஒரு பெண்ணிருந்தால்
இந்த மாதிரிதான் இருப்பாள்
அந்தி மாலைமுதல் இளம் காலைவரை

எந்தன் மனதினில்தான் இருப்பாள்

 
இந்த மாப்பிள்ளை முகத்தை பார்த்ததும்
அவள் மணிமேகலை போல் மாறுவாள்

உன்னை கண்ணால் பார்த்த பாவத்திற்காக
காவிரி நதியில் மூழ்குவாள்
உந்தன் மாமனுக்கும 
உந்தன் மாமனுக்கும
ஒரு பெண்ணிருந்தால் 
ஒரு பெண்ணிருந்தால்
அந்த மாதிரிதான் இருப்பாள்

பட்டாடையில் மேனியை மறைத்து
அத்தானுக்கு மாங்கனி கொடுத்து
மொத்தத்திலே எண்ணத்தைக் கெடுத்து
முந்தானையில் எனைப் பந்தாடுவாள்

என்னென்னவோ பேசுது் உதடு
எங்கெங்கையோ மயக்குது மனசு

டா டா டடா டா டா டா டா டா
கண்பட்டதோ கை பட்டதோ
கன்னமிரண்டும் புண்பட்டதோ
உந்தன் மாமனுக்கும 
ஒரு பெண்ணிருந்தால்
இந்த மாதிரிதான் தருவாள்

அச்சத்திலே தலை மட்டும் குனிந்து
வெட்கத்திலே மடியினில் விழுந்து
சொர்க்கத்திலே ஒருமுறை பறந்து
வந்தாடுவாள் என்னை கொண்டாடுவாள்
 
கையை விடு ரசித்தது போதும்
கண்ணை எடு சுவைத்தது போதும்

டா டா டடா டா டா டா டா டா

அத்தான் மனம் பித்தானதோ
ஆறறிவில் ஒன்று வீணானதோ
உந்தன் மாமனுக்கும் 
உந்தன் மாமனுக்கும்
ஒரு பெண்ணிருந்தால் 
ஒரு பெண்ணிருந்தால்

இந்த மாதிரிதான் இருப்பாள்

1 கருத்து:

கருத்துரையிடுக