தமிழ் சினிமா உலகம் தன் கைக்கெட்டும் தூரத்தில் வைத்திருந்தும் அதிகம் பயன்படுத்திக் கொள்ளாத அற்புதமான கலைஞர்களில் இசையமைப்பாளர் வி.எஸ்.நரசிம்மனும் ஒருவர் என்கிறார் கானா பிரபா தனது இணையத்தில்.
இது நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு இந்தப் பாடலும் ஒரு உதாரணம்.
ஹமீர் கல்யாணியில் ஆரம்பித்து மற்ற சில பல ராகங்களுக்குள் சஞ்சாரம் செய்து விட்டு, மீண்டும் அரம்பித்த ராகத்துக்கே வரும் பாடல் என்கிறார் எனது நண்பர் திரு சுந்தர்ராஜன் தனது இணையத்தில்.
ரசிக்க வேண்டிய பாடல்.
கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்த பின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில் ஒலியும் ஒளியும் கண்டேன்
இது வைரமுத்துவின் திறமைக் கவிதை. அன்றைய பொதிகை நிகழ்ச்சிகளை தொகுத்து தெவிட்டாத ஒரு கவிதை.
திரைப்படம்: கல்யாண அகதிகள் (1985)
இயக்கம்: K பாலச்சந்தர்
இசை: V S நரசிம்மன்
நடிப்பு: சரிதா, அசோக்
குரல்கள்: P சுசீலா, ராஜ் சீதாராமன்
பாடல்: வைரமுத்து
http://asoktamil.opendrive.com/files/Nl8zNTU4NDQ3M19jZ1F0c184YWY4/ManasukkulUkkaarndu-KalyanaAgathigal.mp3
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
காதலின் செய்திகள் கண்களில் உள்ளது
அதை நான் படிக்க மொழி கிடையாது
காதலே நம்மிடம் கையொப்பம் கேட்டது
இனிமேல் உலகில் தடை கிடையாது
நாணம் கொண்டதே என் பூவனம்
பெண்மை ஒன்றுதான் என் சீதனம்
அடடா
ஆ ஆ ஆ ஆ
அடடா இது தான் ஆலிங்கனம்
ஆ ஆ ஆ ஆ
அடடா இது தான் ஆலிங்கனம்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
கண்களில் காதலின் முன்னோட்டம் பார்த்தபின்
இதயம் முழுதும் எதிரொலி கேட்டேன்
மாலையில் சோலையில் இளம் தென்றல் வேளையில்
காண்போம் கற்போம் என்றுனைக் கேட்டேன்
கண்மணிப் பூங்காவினில் காத்திருந்தேன்
கண்ணில் தடங்கலுக்கு வருத்தம் சொன்னேன்
விழியில்
ஆ ஆ ஆ ஆ
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
ஆ ஆ ஆ ஆ
விழியில் ஒளியும் ஒலியும் கண்டேன்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
இறகான என் நெஞ்சில் இடம் பிடித்தாய்
இன்று என் காதல் தேருக்கு வடம் பிடித்தாய்
மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்
என் மௌனத்தை இசையாக மொழிபெயர்த்தாய்
2 கருத்துகள்:
என்றைக்கு கேட்டாலும் மனதில் மணியடிக்கும் இனிமையான பாடல்...
இந்திய தொலைகாட்சி ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்து நான்காம் ஆண்டில் - செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் - வெள்ளி விழா கொண்டாடியது. சென்னைத் தொலைகாட்சி நிலையம் (பொதிகை என்ற பெயர் அப்போது இல்லை) பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியது.
அதில் ஒன்று - சினிமாவில் ஒரு பாடல் காட்சி எவ்வாறு உருவாகிறது என்பதை இயக்குனர் பாலச்சந்தரும் பாடலாசிரியர் வைரமுத்துவும் இப்பாடலின் மூலம் விளக்கினர். கதாநாயகன் சென்னைத் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவர் - கதாநாயகி செய்தி வாசிக்கும் அவர் மீது காதல் கொள்கிறாள்.
பாலச்சந்தர் மிகத் தெளிவாக வைரமுத்துவிடம் அப்போது பிரபலாமாய் இருந்த கண்மணிப் பூங்கா, ஒளியும் ஒளியும், மற்றும் பிற நிகழ்ச்சிகள் அனைத்தும் அப்பாடலில் இருக்க வேண்டும் என கூறுகிறார்.
இவர்களுடன், இசையமைப்பாளர் நரசிம்மன் ஆர்மோனியப் பெட்டியுடன் உடன் இருந்தார்.
பாடலுக்கு நரசிம்மன் இசை அமைத்தார்.
(அந்த ஆண்டுதான் தில்லியில் தொலைக்காட்சியின் இரண்டாம் அலை வரிசை துவக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் கழித்து சென்னைத் தொலைகாட்சி தனது இரண்டாம் அலை வரிசையை துவக்கியது. தற்போதைய DD NEWS தான் அன்று நாடு முழுவதும் துவக்கப்பட்ட இரண்டாம் அலைவரிசை).
கருத்துரையிடுக