பின்பற்றுபவர்கள்

திங்கள், 28 ஏப்ரல், 2014

கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா

Gun படுமே பிறர் gun படுமே என்று தொடங்கி பாடினாலும் இனிமையான பாடல்.
கவிஞரின் கற்பனைக்கு எல்லையே இல்லை. இன்றைய இந்தியாவிற்கு .பொருத்தமான பாடலாக இருக்கும்.  பெண்கள்தான் தனியாக நடமாட முடியவில்லையே?

திரைப் படம் : காத்திருந்த கண்கள் (1962)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: ஜெமினி, சாவித்திரி
இயக்கம்: T பிரகாஷ் ராவ்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ்



http://asoktamil.opendrive.com/files/Nl8zNjEwMzMzNl9OZ2JRQV8xZTRk/Kan%20Padumey%20pirar.mp3









கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


புண்படுமே புண்படுமே
புன்னகை செய்யலாமா

பூமியிலே தேவியைப் போல்
ஊர்வலம் வரலாமா

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே

ஆடவர் எதிரே செல்லாதே
அம்பெனும் விழியால் கொல்லாதே

காரிருள் போலும் கூந்தலைக் கொண்டு
கன்னி உன் முகத்தை மூடு

தமிழ் காவியம் காட்டும் ஓவியப் பெண்ணே
மேகத்துகுள்ளே ஓடு

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா


கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

கண்ணாடி முன்னால் நில்லாதே
உன் கண்ணாலும் உன்னைக் காணாதே

மங்கை உன் அழகை மாதர் கண்டாலும்
மயங்கிடுவார் கொஞ்ச நேரம்

இந்த மானிடர் உலகில் வாழ்கிற வரைக்கும்
தனியே வருவது பாவம்

கண்படுமே பிறர் கண்படுமே
நீ வெளியே வரலாமா

உன் கட்டழகான மேனியை
ஊரார் கண்ணுக்குத் தரலாமா

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

என்று கேட்டாலும் இனிக்கும் பாடல்...

கருத்துரையிடுக