பின்பற்றுபவர்கள்

சனி, 4 அக்டோபர், 2014

எல்லோரும் கொண்டாடுவோம் எல்லோரும் கொண்டாடுவோம் ellorum kondaaduvom

இந்தப் பாடலை வண்ணத்தில் குழைத்துக் கொடுத்திருக்கிறார்கள். கண்ணை உறுத்தாத வண்ணம். அருமை. 
இந்த நன் நாளில் இந்தப் பாடலை நினைவுக் கூறுவதில் பெருமிதம் அடைகிறேன். 
என் இனிய இஸ்லாமிய நண்பர்களுக்கு Eid வாழ்த்துக்கள்.

திரைப் படம் : பாவ மன்னிப்பு (1961)
பாடியவர்: T.M. சௌந்தராஜன், நாகூர் ஹனிபா
இசை: M S விஸ்வநாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: சிவாஜி, தேவிகா
 
பாடலாசிரியர்: கண்ணதாசன
இயக்கம்: A பீம்சிங்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்
அல்லாஹ்வின் பெயரை சொல்லி
நல்லோர்கள் வாழ்வை எண்ணி
எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

கல்லாகப் படுத்திருந்து
கழித்தவர் யாருமில்லை
கை கால்கள் ஓய்ந்த பின்னே
துடிப்பது லாபமில்லை
வந்ததை வரவில் வைப்போம்
செய்வதை செலவில் வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே 

ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

நூறு வகை பறவை வரும்
கோடி வகை பூ மலரும்
ஆட வரும் அதனையும்
ஆண்டவனின் பிள்ளையடா
கறுப்பில்ல, வெளுப்பில்ல
கடவுளுக்கு உருவமில்ல
கடலுக்குள் பிரிவுமில்லை
கடவுளில் பேதமில்லை
முதலுக்கு அன்னை என்போம்
முடிவுக்கு தந்தை என்போம்
மண்ணிலே விண்ணை கண்டு
ஒன்றாய் கூடுவோம்

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

ஆடையின்றி பிறந்தோமே
ஆசையின்றி பிறந்தோமே
ஆடி முடிக்கையில் 

அள்ளி சென்றோர் யாருமுண்டோ
படைத்தவன் சேர்த்து தந்தான்
மதத்தவன் பிரித்து வைத்தான்
எடுத்தவன் மறைத்து கொண்டான்
கொடுத்தவன் தெருவில் நின்றான்
எடுத்தவன் கொடுக்க வைப்போம்
கொடுத்தவன் எடுக்க வைப்போம்
இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய் கூடுவோம்..

எல்லோரும் கொண்டாடுவோம்
எல்லோரும் கொண்டாடுவோம்

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஆஹா... இந்தப் பாடலை முன்னரே ரசித்திருந்தாலும் இப்படி வண்ணத்தில் பார்த்ததில்லையே.... எங்கய்யா புடிச்சீங்க...? கலெக்ஷன் தர்றதுல உங்களை அடிச்சுக்க ஆளில்லை அசோக். மிகமிக மகிழ்வோட நன்றி.

Asokaraj Anandaraj சொன்னது…

இது கருப்பு வெள்ளையோ அல்லது வண்ணமோ. நான் அதற்கு காரனதாரியல்ல. யாரோ ஒரு நல்ல மனசுக்காரர் செய்திருக்கிறார். எனக்கு கிடைத்தது. உங்களுக்கு வழங்கினேன். நமது இணைய நண்பர் ஒருவர், என்னமோ எல்லாம் தானே கதை எழுதி படமாக்கி வெளியட்டது போல இதற்கும் என்னை கள்ளர் என்பார். நல்ல மனிதர்.

கருத்துரையிடுக