பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 12 அக்டோபர், 2014

செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் Senthazham poovil

இனிமையான , இளமையான பாடல்.  கே.ஜே. ஜேசுதாஸ் அவர்களுக்கே அமைந்த பாடல். 
இது நடிகரின் சொந்த வாழ்க்கைதான் என்றாலும், பொதுவான வாழ்க்கையில்  வந்துவிட்டதால் இந்த மேற்படி விபரம் எனக்கு தெரிந்தவரை.
நடிகை ஷோபாவின் பரிதாபமான திரையுலக வாழ்கை நமக்கு தெரிந்ததுதான். கொஞ்ச நாட்களே திரையுலகில் இருந்ததால்  அவரைப் பற்றி நிறைய கிசி கிசுக்கள் இல்லை.
இது சரத்பாபு பற்றி நான் கேள்விப் பட்ட ஒரு புது (எனக்கு?) விஷயம். இவர் திரை உலகம் வந்த பின் ரமா பிரபா என்ற நடிகையை மணந்துக் கொண்டார். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரியும்.
இந்த நடிகை ரமாப்ரபா, ஏற்கனவே நடிகர் சண்முகசுந்தரம் என்பவரின் மனைவி. 3 குழந்தைகளுக்கு தாயார். யார் இந்த நடிகர் சண்முகசுந்தரம்? 
கரகாட்டக்காரன் என்ற படத்தில் கனகாவின் தந்தையாக வந்து சிவாஜி போல நடிப்பதாக நினைத்து நம்மை மிரட்டியிருப்பாரே அவரேதான். பாவம்.
இனி பாடலை ரசிப்போம்.

திரைப்படம்: முள்ளும் மலரும் (1978)
பாடியவர்: கே.ஜே. ஜேசுதாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: இளையராஜா

நடிப்பு: ரஜினி, ஷோபா
இயக்கம்:J  மகேந்திரன்









ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும் பாதை
மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம்
பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி
தேன் கனிகளைத் தேடுது
ஆசைக் குயில் பாஷை இன்றி
ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

அழகு மிகுந்த ராஜகுமாரி
மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு
மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என
ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தரத் தேடுகின்றேன்
எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

இளைய பருவம் மலையில் வந்தால்
ஏகம் சொர்க்க சிந்தனை
இதழை வருடும் பனியின் காற்று
கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடைக் காற்று
வானுலகைக் காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று
எங்கோ என்னைக் கூட்டுது
மறவேன் மறவேன் அற்புதக் காட்சி

செந்தாழம் பூவில்
செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூவாசம் மேடை போடுதம்மா
பெண் போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்
அம்மம்மா ஆனந்தம்

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இந்த சண்முக சுந்தரம்தான் - சல்லியன் கதா பத்திரத்தில், கர்ணன் திரைப்படத்தில் நடித்திருப்பார். கர்ணனுக்கு போரின் இறுதியில் தேரோட்டியாகவும் வருவார்.

Unknown சொன்னது…

புதிய செய்தி சார். நன்றி.

கருத்துரையிடுக