பின்பற்றுபவர்கள்

புதன், 15 அக்டோபர், 2014

வசந்தமும் நீயே மலர்களும் நீயே vasanthamum neeye malargalum

சங்கர் கணேஷ் இசையில் ஒரு அருமையான பாடல். கவிதை வரிகளுக்கு கண்ணதாசன் சொந்தமாக இருக்கலாம். எஸ்.ஜானகி குரலில் சுகராகம். படக் காட்சி கிடைக்கவில்லை. இதே டெம்போவில் பாடல் காட்சி இருந்திருக்குமா?
கேட்கக் கேட்க திகட்டாத பாடல்.

திரைப்படம்: கண்ணீர் பூக்கள் (1981)
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ராஜசேகர்
நடிப்பு: விஜயன், ஸ்ரீபிரியா








 
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே

வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

மாலை நான் மலரானவள்
மார்பில் தேன் நதியானவள்

நாளும் நீ அதில் நீந்தவும்
தேடும் ஓர் கரை காணவும்
நான் உன்னை மார்போடு தாலாட்டலாம்
ஒன்றான நெஞ்சங்கள்
தழுவுவதும் உருகுவதும்
மயங்குவதும் மருவுவதும்
நூறாண்டு காலங்கள்
நாம் காணலாம்
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே

இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

ஆடை ஏன் கலைகின்றது
ஆசை ஏன் அலைகின்றது
மோகம் ஏன் எழுகின்றது
தேகம் ஏன் சுடுகின்றது
ஏனிந்த மாயங்கள்
யார் தந்தது
ஏழேழு ஜென்மங்கள்
எனதிளமை உனதுரிமை
இது முதல் நாள்
இனி வரும் நாள்
எல்லாமும் பேரின்ப நாளல்லவோ
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

தீபங்கள் எரிகின்றன
தேகங்கள் இணைகின்றன
ஆரம்பம் இதுவென்றது
ஆனந்தம் வருகின்றது
செவ்வானம் தேன்மாரி பெய்கின்றது
சிங்கார ராகத்தில் இசை எழுந்தது
துயில் கலைந்தது
உயிர் கலந்தது
தனை மறந்தது
காணாத பேரின்பம்
நான் காண்கிறேன்
வசந்தமும் நீயே
மலர்களும் நீயே
இளமாலை விளையாடும்
இளந்தென்றல் நீயே
இசை கொஞ்சும் தமிழ் சிந்தும்
சுகராகம் நீயே
வசந்தமும் நீயே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக