பின்பற்றுபவர்கள்

திங்கள், 9 மார்ச், 2015

மார்கழித் திங்கள் மதி....Maargazhi thingal mathi

மார்கழி மாதம் மட்டும்தான் கேட்கணுமா என்ன? என்றைக்கு கேட்டாலும், P சுசீலா அம்மாவின் குரலும் K V மகாதேவனின் இசையும் மனதை கொள்ளைக் கொள்ளும்.

திரைப் படம்: திருமால் பெருமை  (1968)
இசை: K V மகாதேவன்
பாடல்: ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவை
பாடியவர்: P சுசீலா
நடிப்பு: சிவாஜி கணேசன், K R விஜயா
இயக்கம்: A P நாகராஜன்


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேற் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக