பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 மார்ச், 2015

மார்கழியில் குளிச்சு பாரு ...margzhiyil kulichchi paaru...

தங்கர் பச்சானின் ஒன்பது ரூபா நோட்டு திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். சமீபத்தில் என் மனதை தொட்டு சென்ற பாடல்களில் இது ஒன்று. உங்களுக்கும் பிடித்திருக்கலாம்.

திரைப்படம்: ஒன்பது ரூபாய் நோட்டு (2007)
இசை: பரத்வாஜ்
பாடல்: வைரமுத்து
நடிப்பு: சத்யராஜ், அர்ச்சனா
இயக்கம்: தங்கர் பச்சன்மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்

பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் 

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்

சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும் 

என்னோட சொத்தெல்லாம் தொலச்சுப்புட்டேன்

இப்போ என்பேரில் உலகத்தையே எழுதிக்கிட்டேன்

துறவிக்கு வீடு மனை ஏதும் இல்ல

ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல

சில்லென காத்து சுற்றோட ஊற்று

பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம்

போதுமடா போதுமடா போதுமடா சாமி

நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

காசு பணம் சந்தோசம் தருவதில்ல

வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல

போதுமுன்னு மனசு போல செல்வமில்ல

தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வமில்ல

வேப்பமர நிழலு வீசிலடிக்கும் குயிலு

மாட்டு மணி சத்தம் வயசான முத்தம்

போதுமடா போதுமடா போதுமடா சாமி

அட என்னப்போல சுகமான ஆளிருந்தா காமி

மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும்

மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும்

பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும் 

வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும்

சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

மனத்தை உலுக்கிய நல்ல பாடல்.

Asokaraj Anandaraj சொன்னது…

உண்மைதான் நாகராஜன் சார். நீண்ட நாள் கழித்து...ஒரு நல்ல பாடல்.

கருத்துரையிடுக