பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 மார்ச், 2015

வானம் இங்கே மண்ணில் வந்தது....vanam inge mannil


சங்கர் கணேஷ் பாடல்கள் பெரும்பாலுமானவை 

ஹிந்தியிலிருந்தோ மற்ற மொழிகளில் இருந்தோ எடுத்து 

கையாண்டதாக இருக்கும். ஆனால் இனிமையான 

பாடல்களை காப்பி அடித்திருப்பார்கள். தாசரியின் படப் 

பாடல்கள் கொஞ்சம் கண்டிப்பானவை. நன்றாக இருந்தால் 

மட்டுமே பாடலை ஏற்றுக் கொள்வார். அந்த வகையில் இந்தப்

படப் பாடல்கள். தெலுங்கில் சிவரஞ்சனி எனும் படத்தின் 

தமிழாக்கம் இது.


இயக்கம்: தாசரி நாராயண ராவ்

நடிப்பு: ஸ்ரீப்ரியா, மோகன்பாபு

இசை: சங்கர் கணேஷ்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், ஜானகி

பாடல்: கண்ணதாசன் அல்லது புலமைபித்தன்


வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

ஆகாயம் காணாத நட்சத்திரம்

உன் அங்கத்தில் நாண் சூடும் முத்துச்சரம்

ஹ ஹ ஹ ஹ

நாள்தோரும் மறைவாக நான் பார்க்கவோ

சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ

ஆகாயம் காணாத நட்சத்திரம்

உன் அங்கத்தில் நான் சூடும் முத்துச்சரம்

ஹ ஹ ஹ ஹ 

நாள்தோரும் மறைவாக நான் பார்க்கவோ

சுக நாதத்தில் என் நெஞ்சம் வான் பார்க்கவோ

இன்ப வேதனை அது தராமல்

இன்ப வேதனை அது தராமல்
உள்ளமிது ரெண்டும் தள்ளாடும்

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அறுபத்து நான்கென்னும் கலை என்னவோ

ஹ ஹ ஹ ஹ 

எல்லாம் ஒரு நாளில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

ஹ ஹ ஹ ஹ 

ஆனந்த நீராடும் நிலை என்னவோ

அதில் அறுபத்து நான்கென்னும் கலை என்னவோ

ஹ ஹ ஹ ஹ 

எல்லாம் ஒரு நாளில் நீ காணவோ

உன் இளமேனி தாங்காமல் போராடவோ

இன்ப கங்கையில் இரு ஓடங்கள்

இன்ப கங்கையில் இரு ஓடங்கள்
போகட்டும் கரை காணட்டும்

வா வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

வா வா வா வா

வா வா வா

வானம் இங்கே மண்ணில் வந்தது

அதன் வாசல் என்னை வா வா என்றது

மேகம் அங்கே மஞ்சம் தந்தது

பொன் மின்னல் ஒன்று நெஞ்சில் கண்டேன்

ஹ ஹ ஹ 

2 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இப்படத்தில் வரும் அவள் ஒரு மேனகை பாடல், இதன் மூலமான சிவரஞ்சனி தெலுங்குப் படத்தில் வருகின்ற பாடலின் மெட்டே

Unknown சொன்னது…

ஆமாம் நாகாஜன் சார். இங்கே பார்க்கலாம்
http://asokarajanandaraj.blogspot.com/search?q=%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%95%E0%AF%88

கருத்துரையிடுக