பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 மார்ச், 2012

ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம் ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்

வழக்கம் போல் T ராஜேந்திரனின் கலக்கல் பாடல் ஒன்று. ஈடு இணை இல்லாத  இசையும் பாடலும். S P B யும் கலக்கி இருக்கிறார்.

திரைப் படம்:  மைதிலி என்னை காதலி
நடிப்பு: அமலா
இசை, இயக்கம், பாடல் வரிகள்: T ராஜேந்தர்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
தத்த தகதிமி தத்த தகதிமி தத்த தகதிமிதோம்
தா குஜ ஜம் தரி தா
தத குத ஜம் தரி தை
தா குஜ ஜம் தரி
தத குத ஜம் தரி
தத்ததீங்கனத்த
ததீங்கனத்த
ததீங்கனத்த தா
தடாகத்தில் மீன் ரெண்டு காமத்தில் தடுமாறி
தாமரை பூமீது விழுந்தனவோ
இதை கண்ட வேகத்தில் ப்ரம்மனும் மோகத்தில் படைத்திட்ட
பாகம் தான் உன் கண்களோ
காற்றில் அசைந்து வரும் நந்தவனத்து இரு
கால்கள் முளைத்ததென்று நடைபோட்டாள்
ஜதி என்னும் மழையினிலே ரதி இவள் நனைந்திடவே
அதில் பரதம் தான் துளிர்விட்டு பூப்போல பூத்தாட
மனமெங்கும் மணம் வீசுது
எந்தன் மனமெங்கும் மணம் வீசுது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
நாதின் தின்னா நாதின் தின்னா
தித்தா திகி திகி தித்தா திகி திகி
தித்தா திகி திகி தித்தா திகி திகி
ரிக தான தானதா ரிக தான தானதா
ரிக தான தான

சந்தன கிண்ணத்தில் குங்கும சங்கமம்
அரங்கேற அதுதானே உன் கன்னம்
மேகத்தை மணந்திட வானத்தில் சுயம்வரம்
நடத்திடும் வானவில் உன் வண்ணம்
இடையின் பின்னழகில் இரண்டு குடத்தைக்கொண்ட
புதிய தம்புராவை மீட்டிச்சென்றாள்
கலை நிலா மேனியிலே சுளை பலா சுவையை கண்டேன்
அந்த கட்டுடல் மொட்டுடல் உதிராமல் சதிராடி
மதி தன்னில் கவி சேர்க்குது
எந்தன் மதி தன்னில் கவி சேர்க்குது
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு
அவள் விழிகளில் ஒரு பழரசம்
அதை காண்பதில் எந்தன் பரவசம்
ஒரு பொன் மானை நான் காண தகதிமிதோம்
ஒரு அம்மானை நான் பாட தகதிமிதோம்
சலங்கையிட்டாள் ஒரு மாது
சங்கீதம் நீ பாடு

ஞாயிறு, 18 மார்ச், 2012

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். பாடும் நிலா பாலுவும் பின்னர் நாளில் தனிப் பாடலாக அதே வீரியம் குறையாமல் பாடி இருக்கிறார். பலர் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்களுக்காக இதோ இரு பாடல்களும்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்



http://www.divshare.com/download/16972903-980

S P B குரலில்



http://www.divshare.com/download/16972910-c0b

தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினை காக்கும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழங்கும் கோவில் மணியோசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணியோசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

வெள்ளி, 16 மார்ச், 2012

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது என் நெஞ்சை உசுப்புது


மென்மையான இசையும் குரல்களும் பாடலுக்கு பக்க பலமாக உள்ளன.

திரைப் படம்: திருமதி பழனிச்சாமி (1992)
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜா
நடிப்பு: சத்யராஜ், சுகன்யா
இயக்கம்: R சுந்தர்ராஜன்





http://www.divshare.com/download/17015687-682



http://www.divshare.com/download/17015699-e5b

நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
சின்ன இடை நீயும் தொட்டு
சீண்டுவதில் நாணம் விட்டு
நான் ஒரு கிறக்கத்திலே
கதை படிக்கிற நேரம்
சித்திரம் போல் நீயும் மின்ன
சில்மிஷமும் நானும் பண்ண
ஆனந்த குளத்தினிலே
அலை அடிக்கிற காலம்
உன்னை எண்ணி ஏங்கி இருந்தேன்
உன்னிடத்தில் என்னை இழந்தேன்
கண்ணிரண்டும் பூத்து கிடந்தேன்
கட்டில்வரை காத்து கிடந்தேன்
வாலிபம் தவம் இருந்த வேளை வந்ததையா
இள மனசு இனி உன்னைத்தான் விடுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
முன் கதவை தாப்பா போட
மல்லியப்பூ வாசம் கூட
மாப்பிள்ளை மனசுக்குள்ளே
மடை திறந்தது ஆசை
அங்கே இங்கே கிள்ளக் கிள்ள
ஆசையிலே துள்ள துள்ள
வீட்டுக்கு வெளியில் செல்லும்
வளை குலுங்கிடும் ஓசை
என்ன செய்ய வேகம் வருது
உன்னை அள்ள மோகம் வருது
வஞ்சிப் பொண்ணு வாழ குருத்து
வித்தைகளை கட்டு படுத்து
போதையை கிளப்புதடி பூவே உன் வனப்பு
விரல் நுனி தான் உடல் முழுதும் படுமோ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது
இந்த மாலை மயக்கம் தான் அதி காலை வரைக்கும் தான்
அன்பு கூட்டல் கணக்கு தான் சொல்லி காட்டு எனக்கு தான்
முதன் முதலா வித விதமா சுகமோ ஓ ஓ ஓ
நடு சாமத்திலே சாமந்திப் பூ ஆள அசத்துது
என் நெஞ்சை உசுப்புது
நல்ல ராத்திரியில் பூத்திரி தான் பார்த்து ரசிக்கிது
கட்டில் பாடம் ருசிக்கிது

ஞாயிறு, 11 மார்ச், 2012

உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றி பேசும் மொழி


மக்கள் திலகத்துடன் அழகான பாரதி இணைந்து இனிமையான பாடலை, காதலுக்கு உண்மையான மரியாதையை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப் படம்: நாடோடி (1966)
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/16998773-80c



http://www.divshare.com/download/16998777-4cf

உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் பேசிய பின்பும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடி சென்று சேர்வது காதல்
தேடி சென்று சேர்வது காதல்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

வெள்ளி, 9 மார்ச், 2012

காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு


எப்போதுமே திருமதி ஜமுனாராணியின் பாடல்களில் அவரது குரல் கம்பீரமாக ஒலிக்கும். அதுவும் இந்தப் பாடலில் கம்பீரமும் காதலும் இழைந்தோடும் அற்புதம் இனிமை.

திரைப் படம்:  தெய்வப்பிறவி (1960)
பாடியவர்: K ஜமுனாராணி
இசை: R ஸுதர்சனம்
நடிப்பு:  சிவாஜி, பத்மினி
இயக்கம்: கிருஷ்ணன் பஞ்சு









ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
கன்னி உலகம் காணாத புதுசு காதல் ஒரு தினுசு
எங்கள் காதல் ஒரு தினுசு
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
காதல் உள்ளம் ஒன்று உருவம் ரெண்டு கண்களும் நாலு
காவல் மீறி நின்று ஆவல் கொண்டு ஏங்குதே இன்று
பொல்லாதது 
பொல்லாதது  மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு

மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
மாலை பொழுது போனா மனம் வீணா மயங்குதே தானா
வேளை வந்த பின்னால் வீசும் கண்ணால் பேசுவேன் கண்ணா
பொல்லாதது
பொல்லாதது மனம் பொல்லாதது
என்ன சொன்னாலும் கேளாதது
காளை வயசு கட்டான சைஸு களங்கமில்லா மனசு