பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 18 மார்ச், 2012

தேவன் கோவில் மணியோசை நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை


கணீர் குரலோன் சீர்காழி கோவிந்தராஜன் பாடிய பாடல். பாடும் நிலா பாலுவும் பின்னர் நாளில் தனிப் பாடலாக அதே வீரியம் குறையாமல் பாடி இருக்கிறார். பலர் கேட்டிருக்கலாம். இதுவரை கேட்காதவர்களுக்காக இதோ இரு பாடல்களும்.

திரைப் படம்: மணியோசை (1963)
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
பாடல்: கண்ணதாசன்
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
நடிப்பு: கல்யான் குமார், விஜயகுமாரி
இயக்கம்: P மாதவன்http://www.divshare.com/download/16972903-980

S P B குரலில்http://www.divshare.com/download/16972910-c0b

தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணியோசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சின் மணியோசை
இது உறவினை கூறும் மணியோசை
இவன் உயிரினை காக்கும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

அருமை மகனே என்றொரு வார்த்தை
வழங்கும் கோவில் மணியோசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணியோசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணியோசை
தேவன் கோவில் மணியோசை
நல்ல சேதிகள் சொல்லும் மணியோசை

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான பாடல் ! நன்றி !

Covai Ravee சொன்னது…

ஒரே பாடலை இரு குரல்களின் என் மனதை குளிர வைத்த உங்களுக்கு நன்றி. இதே போன்று மற்ற பாடகர்களின் ஒலித்தொகுப்பை இங்கே சென்றும் பார்க்கலாம். http://myspb.blogspot.in/2008/06/658.html

கருத்துரையிடுக