பின்பற்றுபவர்கள்

வியாழன், 1 மார்ச், 2012

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் நிலைமை என்னவென்று தெரியுமாஅழுத்தமான பெண்குரலில் இனிமையான இரு குரலிசை. நல்ல தமிழிலில்.

திரைப்படம்: இரும்புத் திரை (1960)
இசை: S V வெங்கடராமன்
பாடியவர்கள்: T M S, P லீலா
இயக்கம்: S S வாசன்
நடிப்பு: சிவாஜி, வைஜெயந்திமாலா
http://www.divshare.com/download/16877765-c9a

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து ஆ ஆ ஆ ஆ
என்றும் பேசாத தென்றல்
இன்று மட்டும் காதில் வந்து
இன்பம் இன்பம் என்று சொல்வதும் என்ன

ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு ஆ ஆ ஆ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ
ஓர விழி பார்வையிலே
உள்ளதெல்லாம் சொல்லி விட்டு
ஒன்றும் தெரியாதது போல்
கேட்பதும் ஏனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா

கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
மலர்க்கொடி தலையாட்ட மரக்கிளையும் கை நீட்ட
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ
கிளையில் கொடி இணையும்படி ஆனதும் ஏனோ

இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
இயற்கையின் வளர்ச்சி முறை இளமை செய்யும் கிளர்ச்சி இவை
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ
ஏனென்று நீ கேட்டால் யானறிவேனோ

நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா
கண்ணில் குடியிருக்கும் காதலிக்கு நானிருக்கும்
கவனம் என்னவென்று தெரியுமா
கருத்தை புரிந்து கொள்ள முடியுமா
என் கருத்தை புரிந்து கொள்ள முடியுமா

2 கருத்துகள்:

Covai Ravee சொன்னது…

இது போன்ற மனதை மயக்கும் பழைய பாடல்களின் வனொலித்தொகுப்புகளை பதிவிறக்கம் செய்து கேட்க இதிலே செல்லலாம்.

http://paasaparavaikal.blogspot.in/

அதே போல் ஒரு நகைச்சுவையை திரையிசை பாடல் தொகுப்புக்களையும் பதிவிறக்கம் செய்து கேட்க இங்கே விஜயம் செய்யுங்கள். அன்பர்களே.

http://anjalipushpanjali.blogspot.in/

கிணற்றுத் தவளை சொன்னது…

அருமையான இரண்டு தொடர்புகளுக்கு நன்றி திரு கோவை ரவி அவர்களுக்கு

கருத்துரையிடுக