பின்பற்றுபவர்கள்

சனி, 24 மார்ச், 2012

நான் பேச வந்தேன் சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

இளையராஜாவின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று. உண்மையிலே ஒரு மெல்லிசை.


திரைப் படம்: பாலூட்டி வளர்த்த கிளி (1976)
குரல்கள்: S P B, S ஜானகி,
இசை: இளையராஜா
பாடல் : கண்ணதாசன்
நடிப்பு: விஜயகுமார், ஸ்ரீபிரியா
இயக்கம்: தேவராஜ்-மோகன்நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்

நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
உன் வாய் மொழி மணி வாசகம்
நீ சொல்லாமல் என் நெஞ்சில் சொல்லில்லை
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

ஏழிசை பாடும் இமைகள் இரண்டும்
பட பட படவென வரும் தாபங்கள்

ஆலிலை மீது தழுவிடும் காற்று
சல சல சல வென வரும் கீதங்கள்

குலமகள் நானம் உடன் வரும் போது
மௌனமே இறைவன் தூது
ஒரு கிளி ஊமை ஒரு கிளி பேதை
இடையில் தீராத போதை ஆ ஆ ஆ...
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை


கார் குழல் மேகம் மூடிய நெஞ்சில்
கல கல கல என வரும் எண்ணங்கள்

ஒவியம் தீட்டி காட்டிடும் கன்னம்
பள பள பள என வரும் கிண்ணங்கள்

செல் என கண்ணும் நில் என நெஞ்சும்
சொல்வதே பெண்ணின் தொல்லை
விடுகதை ஓர் நாள் தொடர் கதை ஆனால்
அது தான் ஆனந்த எல்லை ஆ ஆ ஆ..
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை
சிறு வாய் மொழி திரு வாசகம்
நான் கேளாமல் எனக்கேது நாதங்கள்
நான் பேச வந்தேன்
சொல்லத்தான் ஓர் வார்த்தை இல்லை

2 கருத்துகள்:

Covai Ravee சொன்னது…

அழகான இனிமையா பாடல். பகிர்விற்க்கு மிக்க நன்றி.

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடலை எஸ்பிபாலாவும் ஜானகி அம்மாவும் மிகவும் அனுபவித்து பாடி இருக்கிறார்கள். கண்ணதாசன் இளையராஜா கூட்டணி பாடல்கள் அத்தனையும் ஜெம்ஸ் என சொல்லலாம். “பேச வந்தேன் சொல்ல தான் ஓர் வார்த்தையில்லை” என்ற முதல் வரியே கண்ணதாசனின் கவித்திறமைக்கு சான்று.

கருத்துரையிடுக