பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 மார்ச், 2012

கனிய கனிய மழலை பேசும் கண்மணி உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி

இனிமைத் தமிழிலில் அழகானக் குரல்கள்.

திரைப் படம்: மன்னாதி மன்னன் (1960)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்: கண்ணாதாசன்
பாடியவர்கள்:P சுசீலா, T M S
நடிப்பு: பத்மினி, M G R
இயக்கம்: எம். நடேசன்
http://www.divshare.com/download/16945139-1bdhttp://www.divshare.com/download/16945221-b9f

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
சித்திர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ
இந்த பத்தரை மாற்று பாவை மேனி பங்கையம் ஆகாதோ
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
இந்த அழகு வெள்ளமே என்றும் உங்கள் சொந்தமே
புது பண் பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குறைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

கனிய கனிய மழலை பேசும் கண்மணி
உயர் காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா
எந்தன் காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

அற்புத ஓவியம் கண்கள் கற்றது எப்படியோ
உயர் செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனயோ
மந்தளிர் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
ம்
ம்
நல்லமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
நீல வானும் நிலவும் போல கூடுவோம்
நல்ல இன்பமென்னும் படகிலேறி ஆடுவோம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

3 கருத்துகள்:

சீனு சொன்னது…

Nice post. One of my favorite songs.

மன்னாதி மன்னனில் சிவாஜியா? கொஞ்சம் செக் பன்னுங்க...

கணேஷ் சொன்னது…

எம்.ஜி.ஆரின் பாடல்கள் என்றாலே இனிமை. இந்தப் பாடலில் மக்கள் திலகமும் பத்மினியும் காட்டும் முகபாவங்கள் அற்புதம். ம்... என்று அவர் இழுப்பதும், பப்பிம்மா தொடர்வதும்... அருமையோ அருமை. பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

கிணற்றுத் தவளை சொன்னது…

பத்மினி என்றாலே சிவாஜி என்றாகிவிட்ட படியால் தவறுதலுக்கு வருந்துகிறேன். திருத்திவிட்டேன். நன்றி திரு சீனு அவர்களுக்கு.

கருத்துரையிடுக