பின்பற்றுபவர்கள்

திங்கள், 5 மார்ச், 2012

நல்ல வேளை நான் பிழைத்துக் கொண்டேன். (ஏமாறும் முன்)


நண்பர்களுக்கு ஒரு எச்சரிக்கை!!! இணைத்துள்ள விளம்பரத்தை பாருங்கள்.

தொலைபேசியில் கல்யாணம் ஆகாதவர்களுக்கு ஜாதகம் பார்க்க ரூபாய் 100, ஆனவர்களுக்கு ரூபாய் 150 என்கிறார்கள். ஆனால் நேரில் போனால் 5 மணி நேர காத்திருப்புக்கு பின் ஜோசியரின் உதவியாளர் லிஸ்ட் போடுகிறார் ரூபாய் ஆயிரத்துக்கு. இது 10 நிமிடங்கள்தான். முன் பணம் கொடுத்துவிட்டால் நாளை மீண்டும் வந்து 5 மணி நேரம் காத்திருந்து பார்த்தால் எல்லாவற்றையும் விரிவாக விளக்கிவிடுவாராம். இதையே நாங்கள் காத்திருக்காமல் வந்த உடன் உதவியாளர் சொல்லி இருந்தால் எங்களுக்கு நேரமாவது மிச்சமாகி இருக்குமே என்றால் அதெல்லாம் நடுவில் யாரையும் கூப்பிடக்கூடாது. பக்திமயமாக சாமிகள் இருக்கும் அறையில்தான் ஏமாற்றலாம் என்கிறான்கள். பொதுவாக நாம் போனவுடன் கூட்டததை பார்த்தவுடன் நமக்கு தோன்றுவது இவர் நன்றாக பார்ப்பார் போலிருக்கு அதான் இவ்வளவு கூட்டம் என்பதுதான். அதற்காகவே யாரையும் வீட்டுக்கு அனுப்பாமல் இப்படி சோதித்து அனுப்புகிறார்கள். நானும் 5 மணி நேரம் வீணாக போனாலும் பரவாயில்லை. இவனிடம் ஜோசியம் பார்க்க வேண்டாம் என்று சத்தம் போட்டு விட்டு வந்தேன். நாம் சத்தம் போடுவதையும் இரண்டு வேளையாட்க்கள் லாவகமாக அடுத்த ஏமாளிகளுக்கு கேட்காத வண்ணம் வேளியில் தள்ளிக் கொண்டு வந்துவிடுகிறார்கள். ஆக திட்டமிட்டுதான் ஏமாற்றுகிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஊதுகிற சங்கை ஊதிவிட்டேன். அப்புறம் உங்கள் பாடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக