பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 11 மார்ச், 2012

உலகமெங்கும் ஒரே மொழி உள்ளம் பேசும் காதல் மொழி ஓசையின்றி பேசும் மொழி


மக்கள் திலகத்துடன் அழகான பாரதி இணைந்து இனிமையான பாடலை, காதலுக்கு உண்மையான மரியாதையை கொடுத்திருக்கிறார்கள்.

திரைப் படம்: நாடோடி (1966)
இயக்கம்: B R பந்துலு
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T M S, P சுசீலா




http://www.divshare.com/download/16998773-80c



http://www.divshare.com/download/16998777-4cf

உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு

கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
ஒன்றே வானம் ஒன்றே நிலவு
ஓடி சென்ற ஆண்டுகள் கோடி
காதல் பேசி கவிதையில் ஆடி
கலைகள் தேடி கலந்தவர் கோடி
கோடி மனிதர் பேசிய பின்பும்
குறைவில்லாமல் வளர்வது காதல்
நாடு விட்டு நாடு சென்றாலும்
தேடி சென்று சேர்வது காதல்
தேடி சென்று சேர்வது காதல்
உலகமெங்கும் ஒரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி
உருவம் இல்லா தேவன் மொழி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக