பின்பற்றுபவர்கள்

சனி, 31 மார்ச், 2012

மௌனமான நேரம் இள மனதில் என்ன பாரம்


மிக மென்மையான இசையில் அழகாக பாடி இருக்கிறார்கள் பாடகர்கள்.

திரைப் படம்: சலங்கை ஒலி (1984)
இசை: இளையராஜா
பாடல்: வைரமுத்து
இயக்கம்: K விஸ்வனாத்
குரல்கள்: S P B, S ஜானகி
நடிப்பு: கமல், ஜெயபரதா
http://www.divshare.com/download/17052605-1eehttp://www.divshare.com/download/17052811-dbc

ஆ ஆ ஆ ஆ
மௌனமான நேரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்


இளமைச் சுமையை மனம் தாங்கிக்கொள்ளுமோ
குழம்பும் அலையை கடல் மூடிக்கொள்ளுமோ
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி
ஊதலான மார்கழி
நீளமான ராத்திரி
நீ வந்து ஆதரி
மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ
கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
பாதை தேடியே, பாதம் போகுமோ
காதலான நேசமோ
கனவு கண்டு கூசுமோ
தனிமையோடு பேசுமோ

மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்
இது மௌனமான நேரம்
இள மனதில் என்ன பாரம்

மனதில் ஓசைகள்
ஆ ஆ ஆ
இதழில் மௌனங்கள்
ஆ ஆ ஆ
மனதில் ஓசைகள்
இதழில் மௌனங்கள்
ஏன் என்று கேளுங்கள்
இது மௌனமான நேரம்
ம் ம் ம்
இள மனதில் என்ன பாரம்
ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக