பின்பற்றுபவர்கள்

வியாழன், 22 மார்ச், 2012

இரு மாங்கனி போல் இதழ் ஓரம் ஏங்குது மோகம்


மிக மென்மையான சாதாரணமான இசை கருவிகளுடன் இசையும் அழகான குரல்களும் அலங்கரிக்கும் அபூர்வமாகிப் போன இனிமைப் பாடல்.

திரைப் படம்: வைரம் (1974)
இசை: T R பாப்பா
குரல்கள்: S P B, ஜெயலலிதா
இயக்கம்: T R ராமண்ணா
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெயலலிதா, ஜெய்ஷங்கர்





http://www.divshare.com/download/17016096-578



http://www.divshare.com/download/17016174-ca9

இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
கண்மணி ராஜா
பொங்குது நாணம் பார்த்தது போதும்

ஹோ ஹோ ஹோ பார்வைக்கு யோகம்
மங்கல மேளம் குங்கும கோலம் மணவரை மகிமை
ஹா ஹா ஹா அதுவரை பொறுமை
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

திரை மூடும் மேடையிலே நாடகம் பார்த்தேன்
அதில் ஓடும் ஜாடையிலே போதையும் பார்த்தேன்
சிரிப்பால் என்னை மாணிக்க பதுமை அழைத்தது கண்டேன்
எதற்கோ உங்கள் கைகள் இரண்டும் துடிப்பது கண்டேன்
இன்றே நான் பார்க்கவோ இல்லை நாள் பார்க்கவா
ஹா அவசரம் என்ன
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்

இது காதல் பூஜை என்றால் ஆரத்தி எங்கே
அதை காமன் வேண்டும் என்றான் அவனிடம் தந்தேன்
கடை கண் வீசும் பனிமொழியாகும் பால் அபிஷேகம்
இடை எனும் பதுமை நடை எனும் தேரில் ஊர்வல கோலம்
மாலை பொன் மாலையா இல்லை பூ மாலையா
ஆ ஆ ஆ ஆ ஆ
கோவிலில் பார்ப்போம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
ஓ ஓ ஓ
ஏங்குது மோகம்
ஆ ஆ ஆ
பாடுது ராகம்
ல ல ல
ஏங்குது மோகம்
ம் ம் ம்
பாடுது ராகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக