பின்பற்றுபவர்கள்

திங்கள், 13 டிசம்பர், 2010

பால் நிலவு காய்ந்ததே...பார் முழுதும் ஓய்ந்ததே...

திரு.M ஷங்கரின் விருப்ப பாடல் இது. ஜெயசந்திரன் குரலில் இனிமையாக ஒலிக்கிறது. பெரிதும் பேசப் படாத படம் மற்றும் பாடல்.


படம் : யாரோ அழைக்கிறார்கள் (1985)
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: ராஜன் ஷர்மா
நடிப்பு: குரு, அனுராதா


http://www.divshare.com/download/13487998-d15

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,
நான் நினைத்து பார்க்கிறேன்..
நான் நடந்த பாதையை
ஏன் ஏன் ஏன் எனை மறந்தாய் நீதான்...
நிலவே,,நிலவே,,நிலவே,,

கண் முதலில் பார்த்தது..
மண் மயங்கி வீழ்ந்தது..
உன் விழிகள் பார்க்கையில் தினம் கவிதை கோர்த்தது..
நான்..நான்..நான்..உனழகினிலே வீழ்ந்தேன்
மயிலே..மயிலே..மயிலே..

பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,
நீ முதலில் பூசினாய்..
பின் தயங்கி பேசினாய்..
நான் மகிழ்ந்து பாடினேன்..
எனை மறந்து ஆடினேன்..
பூபாளம் இசைத்தது நம் காதல்..
குயிலே..குயிலே..குயிலே..
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,

பெண் மனது மென்மையாம்..
பூவினது தன்மையாம்..
என்று சொன்ன யாவரும் இன்று வந்து பார்க்கட்டும்..
தேன்..தேன்..தேன்.. என் நினைத்தேன் நான் தான்..
அவளே.. அவளே..அவளே..
பால் நிலவு காய்ந்ததே...
பார் முழுதும் ஓய்ந்ததே...
ஏன் ஏன் ஏன் வரவில்லை நீ நீதான்...உயிரே,,

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

எனக்கு பிடித்த பாடல்.

ம.சங்கர் சொன்னது…

மிகவும் நன்றி.வெகு நாட்களாய் இந்த பாடலை இணையத்தில் தேடினேன்.
ம.சங்கர் திருநெல்வேலி

நிலா சொன்னது…

நானும் தான் தேடினேன் இந்தப் பாடலை... இன்று கிடைக்கப்பெற்று மகிழ்ந்தேன். நன்றி

கருத்துரையிடுக