பின்பற்றுபவர்கள்

திங்கள், 3 ஜனவரி, 2011

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே

அழகான காதலை அளவாக தெரிவிக்கும் பாடல்

திரைப்படம்: திருமகள் (1971 )
இயக்கம்: A S A ஸ்வாமி
நடிப்பு: ஜெமினி, பத்மினி
இசை: K V மகாதேவன்

http://www.divshare.com/download/13677166-94d

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...

காதோரம் கூந்தல் இறங்க...கட்டழகு  மேனி மயங்க...கையோடு வளையல் குலுங்க...கட்டிக் கொள்வேன் காதல் விளங்க...

காதோரம் கூந்தல் இறங்க...கட்டழகு மேனி மயங்க...கையோடு வளையல் குலுங்க...கட்டிக் கொள்வேன் காதல் விளங்க...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வேன்...

குறுஞ்சி பூவைப் போல் மணக்கும்...உன் குறு நகை என்னை இழுக்கும்...

குறுஞ்சி பூவைப் போல் மணக்கும்...உன் குறு நகை என்னை இழுக்கும்...

கோவைச் செங்கணி இனிக்கும்... அதை கொடுக்க ஆசைதான் எனக்கும்...

கொட்டும் விழி என்ன அதில் முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் இட்டுவிடவோ...

ஓ ஓ ஓ கொண்டு வந்த தேன் குடத்தை வண்டு வந்து பார்த்த பின்பு...உண்டுவிடக் கேள்வி என்னவோ...

ஹொ ஹோ கொட்டும் விழி என்ன அதில் முத்தமிட்டு முத்தமிட்டு சித்திரங்கள் இட்டுவிடவோ...

கொண்டு வந்த தேன் குடத்தை வண்டு வந்து பார்த்த பின்பு...உண்டுவிடக் கேள்வி என்னவோ...

காலாலே நிலம் அளந்து ...கண்ணாலே முகம் அளந்து...நூல் போலே இடையசைத்து நூறு முறை ஜாடை செய்வாய்...

பவளப் பூவைப் போல் இருக்கும்...உன் பருவம் கையிலே மிதக்கும்...

பவளப் பூவைப் போல் இருக்கும்...உன் பருவம் கையிலே மிதக்கும்...

தவழும் பிள்ளைப் போல் துடிக்கும்..இந்த சரசம் வேறெதில் கிடைக்கும்...

அத்தை மகள் முத்து நகை ரத்தினத்தை மெத்தையிட்டு மத்த கதை சொல்லித் தரவோ...

ஹா ஹா விட்ட குறை தொட்ட குறை மிச்சமில்லை என்றபடி அத்தனையும் அள்ளித் தரவோ...

ஹோ ஹோ அத்தை மகள் முத்து நகை ரத்தினத்தை மெத்தையிட்டு மத்த கதை சொல்லித் தரவோ...

விட்ட குறை தொட்ட குறை மிச்சமில்லை என்றபடி அத்தனையும் அள்ளித் தரவோ...

காலாலே...

நிலம் அளந்து ...

கண்ணாலே...

முகம் அளந்து...

நூல் போலே இடையசைத்து...

நூறு முறை ஜாடை செய்வேன்...

ஹா ஹா ஹா ஹா... ம் ம் ம் ம் ம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக