பின்பற்றுபவர்கள்

புதன், 13 ஏப்ரல், 2011

உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..

பின்னனி இசையிலேயே விரக தாபத்தை காட்டியிருக்கும் இசையமைப்பாளர் திறமைசாலிதான். அதையும் இளமைக் குரல்களுடன்
 T M S, P சுசீலா அம்மாவும் மிக அருமையாக பாடி இருக்கிறார்கள்.


திரைப் படம்: பொண்ணு மாப்பிள்ளை (1969)
இசை: S வேதா
நடிப்பு: ஜெய்ஷங்கர், காஞ்சனா
இயக்கம்: S ராமனாதன்



http://www.divshare.com/download/14543701-7e4



சிரித்த முகம்...
உன் சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
நடத்த வந்த பாடம் என்ன என் கண்ணே..
நடத்த வந்த பாடம் என்ன..
நீ நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
ஆளில்லாத நேரம் பார்த்து ஆடிட வந்தோம்..
ஆசை தீர நாள் முழுதும் பேசிட வந்தோம்..
தேவையான நேரம் பார்த்து நீயும் வந்தாய்..
தேள் கடித்த திருடனைப் போல் நானும் நின்றேன்..
தேள் கடித்த திருடனைப் போல் நானும் நின்றேன்..
கண்ணனுக்கு தேவையென்ன..
கண்ணனுக்கு தேவையென்ன..முத்தம்தானே..
கைகளுக்குள் வட்டமிடும் திட்டம்தானே..
கண்ணன் என்றால் பெண்களுக்கு இஷ்டம்தானே..
காதலுக்கு நடுவில் வந்தால் கஷ்டம்தானே..
காதலுக்கு நடுவில் வந்தால் கஷ்டம்தானே..
சிரித்த முகம் சிவந்ததென்ன கண்ணா கண்ணா..
உன் தேவை என்ன ஆசை என்ன கண்ணா கண்ணா..
நடத்த வந்த பாடம் என்ன கண்ணா கண்ணா..
நீ நடுவில் வந்த கோலம் என்ன கண்ணா கண்ணா..
ஆ ஆராரிரோரோ ஓ ஆயி ராரிரோரோ..
ஆ ரோ ராரி ரோ ரோ..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
அவசரத்தை பார்த்து கண்ணை மூடடா கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
மாலையிட்ட குழந்தையை நான் கவனிக்க வேண்டும்..
மாலையிட்ட குழந்தையை நான் கவனிக்க வேண்டும்..
உன் மனதை வைத்து தடை செய்யாமல் உறங்கடா கண்ணா..
ஆரிரரோ ஆராரோ தூங்கட கண்ணா..
தூங்கட கண்ணா..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
முன்னூறு நாளில் மழலை வந்து பேச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஆரிரரோ இருவருமே பாட வேண்டுமே..
ஆரிரரோ இருவருமே பாட வேண்டுமே..
அது அயர்ந்து தூங்கும் போது
விளையாட வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..
ஓர் இரவில் காதல் காற்று வீச வேண்டுமே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக