பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

நிக்கட்டுமா போகட்டுமா..நீலக் கருங்குயிலே..

இன்று இந்த இழையில் முதன் முதலாக சித்ராவுடன் மனோ இணைந்து பாடிய அற்புதமான பாடல் வருகிறது. மென்மையான இசையும் குரல்களும் இதமளிக்கின்றது.


திரைப் படம்: பெரிய வீட்டு பண்ணக்காரன் (1990)
இசை: இளையராஜா
இயக்கம்: N K விஸ்வனாத்
நடிப்பு: கார்த்திக், கனகா
பாடல்: பிறைச் சூடன்




http://www.divshare.com/download/14586310-955


நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..
தாவணிப் போய் சேலை வந்து..
சேலை தொடும் வேளை வந்து..
தாவுதடி...

சொல்லட்டுமா தள்ளட்டுமா..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..

ஆ ஆ ஆ ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ ஆ..

ஓடையில் நான் அமர்ந்தேன்..
அதில் என் முகம் பார்த்திருந்தேன்..
கோடையில் பார்த்த முகம்..
அது உன் முகம் ஆனதென்ன..
வாடையில் வாடிடும் பூவினைப்போல்..
என் நெஞ்சமும் ஆனதென்ன..
தேரடி வீதியிலே..
ஒரு தோரணம் நான் தொடுத்தேன்..
தோரண வாசலிலே..
ஒரு தோழியை கைப் பிடித்தேன்..
பிடித்த கரம் இணைந்திடுமா..
இணைந்திடும் நாள் வருமா..

சொல்லட்டுமா தள்ளட்டுமா..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..
தாவணி போய் சேலை வரும்..
சேலையுடன் மாலை வரும்..
நாள் வரட்டும்..ம்ம்..

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..

துகு துத் துத் துத்..
துகு துத் துத் துத்..

ராத்திரி நேரத்திலே..
ஒரு ராகமும் கேட்டதடி..
கேட்டது கிடைக்குமென்று..
ஒரு சேதியும் சொன்னதடி..
மல்லிகை பூச்செடி..
பூத்தது போல்..
என் உள்ளமும் பூத்ததடி..
அம்மனின் கோவிலிலே..
அன்று ஆசையில் நான் நடந்தேன்..
உன் மனக் கோவிலிலே..
மெட்டிக் ஓசையில் பின் தொடர்ந்தேன்..
நாடியது நடந்திடுமா..
நடந்திடும் நாள் வருமா..

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..

தாவணி போய் சேலை வரும்..
சேலையுடன் மாலை வரும்..
நாள் வரட்டும்..ம்ம்....

நிக்கட்டுமா போகட்டுமா..
நீலக் கருங்குயிலே..
நீலக் கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..
சோலை கருங்குயிலே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக