பின்பற்றுபவர்கள்

சனி, 25 ஜூன், 2011

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

உச்ச ஸ்தாயிலும் கீழ் ஸ்தாயிலும் அடுத்தடுத்து பாடகர்களை பாட வைத்து இசையமைத்து இருக்கிறார்கள் சங்கர் கணேஷ். அரிய வகைப் பாடலும்கூட.

திரைப் படம்: தாயில்லா குழந்தை (1976)

இயக்கம்: தியாகராஜன் (தேவர் மூவீஸ்)

நடிப்பு: ஜெயசித்ரா, விஜயகுமார்

இசை: சங்கர் கணேஷ்

பாடல்: தூயவன்

http://www.divshare.com/download/15168630-5b0

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஏ ஏ ஏ ஏ ஏ

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே ..

கலையாகக் கண்டேன் உன்னை சிலையாக ஆனேன் கண்ணே ..

மழையாக கண்டாய் என்னை மலராக வந்தாய் கண்ணே..

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை..

நடமாடும் ரதமாய் வந்தேன் வடம் போட்டு இழுத்தாய் என்னை..

எழுதாத எழுத்தாய் வந்தேன் இசை போட்டு படித்தாய் என்னை..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து..

பனி நாளில் அனல் போல் நின்று மழை நாளில் குடைபோல் வந்து ..

வெயில் நாளில் நதி போல் ஓடி விளையாடும் சுகங்கள் கோடி..

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி..

அதிகாலை அரும்பாய் தோன்றி பகல் நேரம் மலரை மாறி..

இளமாலை தென்றல் ஏறி இணையாவோம் வாழ்த்துக்கூறி..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே ..

நீ மேகம் ஆனால் என்ன நான் தோகையான பின்னே..

விரலாகி இசைத்தாலென்ன நான் வீணையான பின்னே..

நீ மேகம் ஆனால் என்ன..

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

எத்தனை அழகான வரிகள் !! எழுதியது நிச்சயம் கவியரசராக தான் இருக்கு.

கருத்துரையிடுக