பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 24 ஜூன், 2011

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..

திரு V குமார் பாடல்கள் பலவற்றில் இது ஒரு மறக்க முடியாத பாடல்.
S P B, வாணி ஜெயராம் குரல்கள் பாடலுக்கு சிறப்பான மெருகூட்டி இருக்கின்றன.


திரைப் படம்: நாடகமே உலகம் (1979)
குரல்கள்: S P B, வாணி ஜெயராம்
இசை: V குமார்
இயக்கம்: பஞ்சு அருணாசலம்
நடிப்பு: சரத் பாபு, K R விஜயா



Play Music - Download Audio -






ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
ல ல ல ல ல..
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ..
ல ல ல ல..
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..

நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...

மேனியில் ஆனந்த லயங்கள் மோகன ராகத்தின் நயங்கள்..
அங்கங்கள் எங்கெங்கும் காலத்தின் கோலங்களே...

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...
தப தப சனி தப..
தப தப சனி தப..
சக சக தனி சப சக சக சனி தப..
நித பம கரி சனி..

மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன..
மூவகை தமிழ் பேசும் பூவிழி இரண்டென்ன..
நால் வகை குணம் கொண்டு நாணுமோ..
நாயகன் தொடும்போது நாணம் விளையும்..
நாயகன் தொடும்போது நாணம் விளையும்..
நானலின் இனம் போலே தேகம் வளையும்..
நேரம் பொன்னான நேரம்...
நெருங்க சொல்கின்றதோ..

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..

ஆடையை கலைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்..
ஆடையை கலைந்தாடும் ஆசையில் வரும் தென்றல்..
ஆடவன் துணை கண்டு அஞ்சுமோ..
உம்..
மாதுளம் கனியாகும் மாலை பொழுது..
மாதுளம் கனியாகும் மாலை பொழுது..
மஞ்சளின் நிறம் காட்டும் மங்கை அழகு..
யாவும் கண்ணா உன் சொந்தம்..
எடுத்து கொண்டாட வா..

சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்..
சங்கீதத்தின் தாலாட்டை கேட்டேன்..
நடமாடும் கலை கூடம் விழி ஜாலத்தில் உருவானதோ..
விழி ஜாலத்தில் உருவானதோ...

1 கருத்து:

தமிழ் உதயம் சொன்னது…

எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்.

கருத்துரையிடுக