பின்பற்றுபவர்கள்

திங்கள், 10 செப்டம்பர், 2012

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது


அமைதியான, அழகானப் பாடல். ஜயன், மலையாள ஸ்டண்ட் நடிகர். நடிக்க ஆரம்பித்த காலத்திலேயே ஒரு ஸ்டண்ட் காட்சியில் விபத்தில் இறந்தார்.


திரைப் படம்: பூட்டாத பூட்டுக்கள்

இசை: இளையராஜா
குரல்: S ஜானகி
இயக்கம்: K மகேந்திரன்
நடிப்பு: ஜயன், சாருலதா
பாடல்: பஞ்சு அருணாசலம்


http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2MTg0N19mUjhsZF9hZDJk/Aanantham.mp3


ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது

ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவா
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே
வசந்தம் வந்தது
அன்போடு பாசம் சேர்ந்திட ஊரும் பேரும்
வாழ்ந்திட
வாழை போல வாழ்கவே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும்போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது
இனிக்கும் கரும்பு
கொடுத்தாயே
இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
தெய்வம் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம்
நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி சார்...

riyas qurana சொன்னது…

நீண்டகாலமாக நான் தேடிக்கொண்டிருக்கும் பாடலான ''அம்மம்மா அவசரமா அணைத்தாலென்ன பாவமா'' என்ற ஜேசுதாஸ் பாடி, குயிலே குயிலே (1984) படத்தில் ஷியாம் இசையமைத்த பாடல் யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள்...

Raashid Ahamed சொன்னது…

ஜானகி அம்மா தனித்துபாடிய பாடல்களில் இதுவும் ஒரு அழகான பாடல். இந்த பாடலை ஜானகி மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியோடும் பாடுவதை போல் தோன்றும்.

கருத்துரையிடுக