அமைதியான சூழலில் கேட்க வேண்டிய பாடல்களில் இதுவும் ஒன்று. பாடல் வரிகளை விழுங்காத இசை. P சுசீலாவின் தேன் போன்ற குரல் வளமை இன்னமும்.
திரைப் படம் : என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான் (1989)
குரல் : P சுசீலா
பாடல் : மூ.மேத்தா
இசை : இளையராஜா
நடிப்பு : விஜயகாந்த், சுகாசினி
இயக்கம்: மனோபாலா
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
குழலூதும் கண்ணனின் வண்ண மேனி
கதை சொல்வான் கண்களில் அந்த ஞானி
வலை வீசும் கனவிலே வந்து போவான்
கலைமானின் நெஞ்சிலே சொந்தமாவான்
தாயாக மாறும் அவன் தாலாட்டு பாட்டு
சேயாகும் எனது மனம் தேனூறக் கேட்டு
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
குரலில் சங்கீதம் கூடு கட்டும் அங்கே
இதயம் சிறகடிக்கும் என் வீட்டிலே
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
ல ல ல ல ல ல ல
மணிமார்பில் மழலை போல் தூங்க வேண்டும்
விடிந்தாலே நான் தினம் ஏங்க வேண்டும்
வழி பார்த்து வாசலில் காக்க வேண்டும்
என் மன்னன் அன்பிலே தோற்க வேண்டும்
ஆண்பிள்ளை பணிந்துவிடக் கூடாது பெண்ணே
கொத்தடிமைப் பழக்கமெல்லாம் ஆகாது கண்ணே
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
ஆடவன் அடங்கினால் மீசை அது எதுக்கு
தனியே பார்த்தால் இதை நீ பேசுவாய்ஒரே ஒரு பூ பூத்தது
பூ பூத்தது
மலரும் நினைவுகள் நான் சொல்வது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
மனதில் ஒரே ஒரு பூ பூத்தது
2 கருத்துகள்:
நல்ல பாடல்... சுகாசினி அவர்களின் நடிப்பும் நன்றாக இருக்கும்...
அன்புடையீர்
முத்துராமன், தேவிகாவின் நடிப்பில் 1968ல் வெளிவந்த "தேவி" என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற "தித்திக்கும் முத்தமிழே" என ஆரம்பிக்கும் பாடலை தேடி எடுத்துத் தரவேற்ற முடியும்? மிகுந்த ஆவலுடன் காத்திருப்பேன்
கருத்துரையிடுக