மென்மையான பின்னனியில் இனிமையான ஸங்கதிகளை தேவையான இடத்தில் புகுத்தி பாடலை மேலும் இனிமையாக்கியிருக்கிறார் இசைதேவன்.
திரைப் படம்: வள்ளி (1993)
இசை: இளையராஜா
குரல்: ஸ்வர்னலதா
பாடல் : வாலி
இயக்கம்: K நட்ராஜ் (ரஜினி என்கிறார்கள் சிலர்)
நடிப்பு: ரஜினிகாந்த், ப்ரியாராமன்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்

நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்

கண்ணிரெண்டில் நூறு வெண்ணிலாக்கள் தோன்றும்
ஆனாலும் அனல் பாயும்
நாடி எங்கும் ஏதோ நாத வெள்ளம் ஓடும்
ஆனாலும் என்ன தாகம்
மெய் சிலிர்க்கும் வண்ணம் தீ வளர்த்ததென்ன
தூபம் போடும் நேரம் தூண்டிலிட்டதென்ன
என்னையே கேட்டு ஏங்கினேன் நான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
கூடு விட்டு கூடு ஜீவன் பாயும் போது
ஒன்றில் ஒன்றாய் கலந்தாட
ஊண் கலந்து ஊணும் ஒன்று பட தியானம்
ஆழ் நிலையில் அரங்கேற
காலம் என்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனத்தை போலே இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
எதுவோ மோகம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம்
எங்கெங்கோ எங்கெங்கோ என் எண்ணம் போகும் தூரம்
2 கருத்துகள்:
நான் மெய் மறந்து மாற ஓர் வார்த்தை இல்லை கூற
அழகான வார்த்தைகள் அடிமனதில் கேட்டுக்கொண்டே இருக்கும் வாிகள்.
காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு
இக்கனத்தை போல இன்பம் ஏது சொல்லு
காண்பவை யாவும் சொர்க்கமே தான்
பாராட்ட வார்த்தைகள் இல்லை வாலி ஐயா
கருத்துரையிடுக