சமீபத்திய பாடல்கள் வரிசையில் தமிழ் நாட்டின் ஆங்கில கவிஞர்கள் போல் இல்லாமல் ஆங்கிலம் கலக்காமல் வந்த ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று. நல்ல குரல்களுடன் இனிமை இசையில். 9 நேலாலு என்ற தெலுங்கு படத்தின் டப்பிங்க். தெலுங்கில் இந்தப் படம் 15 நாட்களில் எடுத்து முடிக்கப் பட்டதாக சொல்கிறார்கள்.
திரைப் படம்: கண்டேன் சீதையை (2001)
பாடிய குரல்கள் (தனித் தனி பாடல்கள்) : ஹரிணி, உன்னி கிருஷ்ணன்
இயக்கம் : க்ராந்தி குமார்
இசை: V S உதயா
நடிப்பு: விக்ரம், சௌந்தர்யா
ம் ம் ம் ம் ம் ம்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப் பூச்சிகள்
வானவில்லை சூடியதோ
வாலிப திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில்
சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும்
தென்றலே பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
நி நி நி ச ச ச நி ச நி ச நி ப
ப ம ப நி ப
ரி ம ப நி ப ம ரி ச நி
நி ச நி ச ம ரி ச நி ச
முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
சம்சிக்க சிக்கிதா சம்சிக்க சிக்கிதா
முதல் முதல் ஒரு ஓலை வந்ததோ
உயிர் வரை அது ஊடல் செய்ததோ
ஆடை மறைவில் ஓடை மீன் கள்
பரதம் தான் ஆடுதோ
ஓடும் முகிலை தேடிப் பிடித்து
வானம் முகம் மூடுதோ
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அலைபோலே வந்து பாடுதே காவடி சிந்து
இதழோரம் ஏதேதோ வார்த்தைகள்
அணைப் போட்டால் கூட
ஆனந்தம் மௌனம் இன்று
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
தான தனனா தான
தான தனனா தான
புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலே வந்ததோ
சம்சிக்க சிக்கிதா சம்சிக்க சிக்கிதா
புது புது ஒரு யுத்தம் வந்ததோ
புயல் மழை இடி போலே வந்ததோ
சிட்டுக்குருவி சிறகை வாங்கி
பறக்க தான் தோன்றுதோ
வெட்ட வெளியில் எட்டுப் போட்டு
ஓடத்தான் தோன்றுதோ
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மழை கொட்டும் போதும்
வானத்தைப் பார்த்திட தோன்றும்
சந்தோஷப் போர்க்களம் ஆரம்பம்
மல்லிகைப் பூவில் ஆடைகள்
தைத்திட தோன்றும்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ
பச்சை விளக்கு எரிகிறதே
வண்ணத்துப் பூச்சிகள்
வானவில்லை சூடியதோ
வாலிப திரைகள் கிழிகின்றதே
அழகான மாற்றங்கள் ஆரம்பம்
யாரோடு யாரோ பூமியில்
சேர்ந்திட கூடும்
திசை மாறும் போதும்
தென்றலே பூக்களை மோதும்
யார் வந்து பூவுக்குள்
கிச்சு கிச்சு மூட்டியதோ
புன்னகை வெட்கம் புரிகிறதே
யார் வந்து மனசுக்குள்
புகை வண்டி ஓட்டியதோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக