அந்த கால கட்டத்தின் சரியான குத்து பாடல் இது. வாணி ஜெயராம் கூட இப்படி பாடுவாரா என்பதாக இருந்தது. (P சுசீலா அம்மா வாங்கோன்ன அட வாங்கோன்ன பாடியது போலே) இசையில்தான் வழக்கம் போல பாபி பாடலிசையை இணைத்துக் கொண்டார்கள் ஷங்கர் கணேஷ்.
திரைப் படம்: பாலாபிஷேகம்
நடிப்பு: ஜெய்ஷங்கர், ஸ்ரீபிரியா
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
பாடியவர்கள்: வாணி ஜெயராம், கோவை சவுந்திரராஜன்
பாடல்: A மருதகாசி
இசை: ஷங்கர் கணேஷ்
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
தையாரி தையாரி
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்
செவ்வப்பு என் வனப்பு உன் நெனப்புல மயங்க
கொடியும் மெல்ல வளையும் சிறு கொடியில் கனி குலுங்க
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
தை மாசம் கல்யாண நாள் குறிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
ஊர்கோலம் போய்யா நீ கைய புடிச்சி
செவ்வாழை தண்டாட்டம் வந்து தேன் சிந்து
நீ சொன்னால் நான் வாரேன் உன் பின்னாடி தான்
உன் செந்தூர கன்னங்கள் கண்ணாடி தான்
வயல்வெளி வரப்பினில் மறைவிடம் இருக்கு
பெண்ணே நான் வந்தேன் எனை தந்தேன் பயம் எதுக்கு
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
பொல்லாத கண்ணுண்டு ஊருக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
போறாமை உண்டாகும் உறவுக்குள்ளே
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
கனியிது கனிந்தது அணில் வரும் என்று
கொத்தும் கிளி வர்க்கம் கிட்ட வருமோ என்னை கண்டு
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
காயங்கள் ஆறாமல் நான் துடிப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
ஆனாலும் தேன் அள்ளி நானே கொடுப்பேன்
மச்சானே என்
மச்சானே அச்சாரம் போடு பொழுதோடு
நான் வெச்சேனே என் கண்ணை உன் மேலே தான்
நான் பித்தாகி போனேனே உன்னால தான்
1 கருத்து:
செம பாடல்...
கருத்துரையிடுக