பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 20 நவம்பர், 2012

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்


நல்ல கருத்து செறிந்த பாடல். ஒரு நல்ல மனிதரை நினைத்து பாடும் அழகான தெளிவான குரல்.

படம்: அரச கட்டளை (1967)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா, சரோஜா தேவி
இசை: K V மகாதேவன்
இயக்கம்:  எம் ஜி சக்கரபாணி
குரல்: P சுசீலா
பாடல் வரிகள்: வாலி

http://www.mediafire.com/?5dovmy3m6q3na6b



என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
அவன் சோலையில் மலராய்ச் சிரிப்பான்
அந்தி மாலையில் நிலவாய் இருப்பான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
குளிர் ஓடையில் அலையாய்த் திரிவான்
நல்ல கோடையில் குடையாய் விரிவான்
விரிவான்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் சபைகளில் எத்தனை ஆட்டம்
அவன் தோட்டத்தில் பறவைகள் கூட்டம்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
அவன் கலைகளுக்கெல்லாம் மன்னன்
நல்ல கலைஞருக்கெல்லாம் வள்ளல்
வள்ளல்

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் வீட்டுக்குக் கதவுகள் இல்லை
அந்த வாசலில் காவல்கள் இல்லை
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அவன் கொடுத்தது எத்தனை கோடி
அந்தக் கோமகன் திருமுகம் வாழி வாழி

என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன்
அவன் கோவில் இல்லாத இறைவன்
என்னைப் பாட வைத்தவன் ஒருவன்
என் பாட்டுக்கு அவன்தான் தலைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக