பின்பற்றுபவர்கள்

புதன், 7 நவம்பர், 2012

என்ன சுகம் என்ன சுகம் உன்னிடம் நான் கண்ட சுகம்


என்ன சுகம் என்ன சுகம்? இனிமையான பின்னனி இசையும், பாடும் இனிமையான குரல்களும் காட்சிக்கு பொருத்தமான கவிதை வரிகளும் என்ன சுகம் என்ன சுகம் ?

திரைப் படம்: பல்லாண்டு வாழ்க (1975)
இசை: K V  மகாதேவன்
இயக்கம்: K ஷங்கர்
நடிப்பு: M G ராமசந்திரன், லதா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P சுசீலா



http://www.divshare.com/download/16163553-ee0




என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை
உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை
மானிடம் பெற்ற விழி
மதியிடம் பெற்ற முகம்
தேனிடம் கற்ற மொழி தேரிடம் கற்ற நடை
எழுதா
ஹூ ஹூ ஹூம்
கவிதை
ஹா ஹா ஹா
இவள் தான் அடடா

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆ ஹா ஹா ஹா

சந்தன மேனிகளின் சங்கம வேளையிலே
சிந்திய முத்துக்களை சேர்த்திடும் காலமிது
தேங்கனி கோட்டையிலே சிற்றிடை வாசலிலே
தோரண மேகலையில் தோன்றிய கோலமிது

என்ன சுகம் என்ன சுகம்
ஆ ஹா ஹா ஹா
உன்னிடம் நான் கண்ட சுகம்

மார்கழி நள்ளிரவில் மங்கிய வெண்ணிலவில்
கார்க்குழல் சீர் திருத்தி கைகளில் சேர்த்தணைத்து
மங்கையின் நெஞ்சினிலே மன்மதன் நீ எழுதும்
குங்கும கோலங்களின் மங்கல வண்ணங்களை
மறைவாய்
ம் ம் ம்
ரசித்தேன்
ஹூ ஹூ ஹூம்
எதையோ நினைத்தேன்

என்ன சுகம் என்ன சுகம்
உன்னிடம் நான் கண்ட சுகம்
ஆ  ஆ ஹா ஹா ஹா ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

தாஸண்ணா சுசிலாம்மா குரலில் பல்லவியை போன்றே பாடல் மெட்டும் சுகம். போட்டது யாரு கே.வி. எம் மாமா ஆயிறே. அருமை.

கருத்துரையிடுக