பின்பற்றுபவர்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2013

மண மேடை மலர்களுடன் தீபம்

P சுசீலா அம்மாவின் குரல் விசேஷமாக ஒலிப்பதாக இந்தப் பாடலில் தெரிகிறது எனக்கு. எவ்வளவு மென்மை. அதற்கேற்ற பாடல் வரிகளை விழுங்காத இசை. கிருஸ்த்துவர்களின் ஆலயத்தில் பயன்படுத்தப் படும் இசைக் கருவிகளையே பெரும்பாலும் உபயோகித்திருக்கிறார் இசையமைப்பாளர். ஒன்றும் சொல்லுவதற்கில்லை. ஒன்றிவிட்டேன் பாடலில். அருமையானப் பாடல்.



திரைப் படம்: ஞான ஒளி (1972)
குரல்: P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: P. மாதவன்
நடிப்பு: சிவாஜி, சாரதா, ஜெய கௌசல்யா



http://asoktamil.opendrive.com/files/Nl8xMDk3MTQ4NF9xU1NZYV9kOTY0/Mana%20medai.mp3





மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்
மாப்பிள்ளை பெண் என்றால் இவர் என்பார்
என்றும் வாழ்க மணமங்கை என்பார்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

நான் இரவில் எரியும் விளக்கு
நீ என் காதல் மணிமாளிகை
நீ பகலில் தெரியும் நிலவு
நான் உன் கோவில் பூந்தோரணம்
மணி ஓசை ஒலிக்கும் நம் இல்லம் எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் மடியில் விடியும் இரவு
நம் இடையில் வளரும் உறவு
தேகம் தழுவும் மலர் காற்று
மோகம் பரவும் பெருமூச்சு
நான் பெறுவேன் சுகமே சுகமே

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

என் தனிமை உலகம் இனிமை
என் தாய் வீடும் நினைவில் இல்லை
நான் உறவில் உனது அடிமை
உன் துணை போல சுகமும் இல்லை
அருள் புரிவார் தேவன் நம் பாதை எங்கும்

மண மேடை மலர்களுடன் தீபம்
மங்கையர் கூட்டம் மணக்கோலம்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கண்ணியமான பாடல் வரிகள்...

நன்றி சார்...

பெயரில்லா சொன்னது…

திண்டுக்கல் தனபாலன் சார், கண்ணியமான பாடல் வரிகள்தான் ஆனால் பாடல் காட்சியில் கொஞ்சம் விரசத்தை கொண்டுவந்து விட்டார்களே! எப்படியோ எடுத்திருக்க வேண்டிய பாடல் காட்சி இது.

கருத்துரையிடுக