காதல் பாடலானாலும் சற்று கனமான கவிதை வரிகள். பாடகர்கள் இலகுவாக பாடி சென்றுவிட்டார்கள்.
இந்தப் பாடல் வரிகள் எனக்கு கலங்கரை விளக்கம் படத்தில் இடம்பெற்ற பொன்னெழில் பூத்தது என்ற பாடலை நினைவுபடுத்துகிறது.
இந்த இரு பாடல்களிலும் தமிழை கையாண்டிருக்கும் விதம் பாராட்டுக்குறியது. நல்ல கற்பனை.
கீழ்க் கண்ட பதிவில் இந்தப் பாடலை அக்கு வேறு ஆணி வேறாக.... என்னவொறு கலா ரசிகன் இவர்? வாலியே வியந்து போவார் போல ...
http://tamil-blog-india.blogspot.com/2010/01/blog-post_7375.html
திரைப் படம்: சந்த்ரோதயம் (1966)
நடிப்பு: எம் ஜி யார், ஜெயலலிதா
இயக்கம்: K சங்கர்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: வாலி
பாடியவர்கள்: டி எம் எஸ், P சுசீலா
http://asoktamil.opendrive.com/files/Nl8xNjE4Mjc5N19NMHZIUF83MzI4/ChandrOdhayam%20oru%20pen.mp3
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
பொன்னோவியம் என்று பேரானதோ
என் வாசல் வழியாக வலம் வந்ததோ
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
குளிர் காற்றுக் கிள்ளாத மலரல்லவோ
கிளி வந்து கொத்தாத கனியல்லவோ
நிழல் மேகம் தழுவாத நிலவல்லவோ
நெஞ்சோடு நீ சேர்த்த பொருள் அல்லவோ
என்னாளும் பிரியாத உறவல்லவோ
இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
பொன் மாளிகை உந்தன் மனமானதோ
என் காதல் உயிர் வாழ இடம் தந்ததோ
இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
முத்தாரம் சிரிக்கின்ற சிரிப்பல்லவோ
முழு நெஞ்சை தொடுகின்ற நெருப்பல்லவோ
சங்கீதம் பொழிகின்ற மொழியல்லவோ
சந்தோஷம் வருகின்ற வழியல்லவோ
என் கோவில் குடிக் கொண்ட சிலையல்லவோ
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
அலையோடு பிறவாத கடல் இல்லையே
நிழலோடு நடக்காத உடலில்லையே
துடிக்காத இமையோடு விழியில்லையே
துணையோடு சேராத இனமில்லையே
என் மேனி உனதன்றி எனதில்லையே
இதழோடு இதழ் வைத்து இமை மூடவோ
இருக்கின்ற சுகம் வாங்கத் தடை போடவோ
மடி மீது தலை வைத்து இளைப்பாறவோ
முகத்தோடு முகம் வைத்து முத்தாடவோ
கண் ஜாடை கவிச் சொல்ல இசை பாடவோ
இளம்சூரியன் உந்தன் வடிவானதோ
செவ்வானமே உந்தன் நிறமானதோ
சந்த்ரோதயம் ஒரு பெண்ணானதோ
செந்தாமரை இரு கண்ணானதோ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
2 கருத்துகள்:
மிகவும் அருமையான இனிமையான பாடல்...
என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று.என் அப்பாவுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்.தரவிறக்கச்சுட்டிக்கு நன்றிகள்
கருத்துரையிடுக