பின்பற்றுபவர்கள்

சனி, 28 செப்டம்பர், 2013

வானம் எனும் வீதியிலே

பத்மஸ்ரீ K J யேஸுதாஸ், P மாதுரி, இசையமைப்பாளர் G தேவராஜன் எல்லோரும் மலையாள நாட்டை சேர்ந்தவர்கள். இசைக்கு ஏது மொழி என்னும் வண்ணம் இனிமையானப் பாடல். ஜெயலலிதா அவர்களுக்கு ஏற்ற குரல். ஜெயலலிதாவுக்கே இந்த வகையானக் குரல் வளம்தான்.
சர்ச்சில் இசைக்கப் படும் இசையை அடிப்படையாக வைத்து இந்தப் பாடலை  மிக மென்மையாக உருவாக்கியிருக்கிறார்.

திரைப் படம்: அன்னை வேளாங்கண்ணி (1971)
இசை: G தேவராஜன்
பாடியவர்கள்: K J யேஸுதாஸ், P மாதுரி
இயக்கம்: K தங்கப்பன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, ஜெயலலிதா, பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8yMTYzNzA1OV9HMW5xc19iYTVl/Vaanamennum%20Veethiyile%20வானமெனும்%20வீதியிலே.mp3






வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவன் என்று கேட்டு சொல்லுங்கள்
மாதாவை கேட்டு சொல்லுங்கள்

வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
என் உறவுக்கு யார் தலைவி என்று கேட்டு சொல்லுங்கள்
 மாதாவை கேட்டு சொல்லுங்கள்

தாமரையின் இத‌ழ் தடவ
காலை வரும் கதிர் போலே
பூ மக‌ளின் கரம் தழுவ
சோலை வந்த மன்னவனே
யாருக்கு யார் என்று
சேர்த்து வைக்கும் தேவன் இன்று
நீ எந்தன் உரிமை என்று
நெஞ்சோடு சொன்னதென்ன‌
சொன்னதென்ன

 ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே

தட்டினால் திறப்பதன்றோ தேவன் கோவில் மணிக்கதவு
தட்டினாள் பாவை என்று
திறந்ததம்மா மனக் கதவு
நான் படித்த வேதம் எல்லாம்
வான் வரையில் கேட்டதனால்
தாய் மனது இரங்கி வந்தாள்
தக்க துணை தேடித்தந்தாள்
தேடித்தந்தாள்

ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே

மாதுளையின் வாய் திறந்து முத்துக்களை நான் எடுத்து
காதல் என்னும் பசியாற உண்ணுகின்ற காலமெது
மாலை உண்டு மேடை உண்டு நாளை மணம் முடிப்பதுண்டு
சோலை உண்டு தென்றல் உண்டு சொன்னபடி நடப்பதுண்டு
நடப்பதுண்டு

ஆ ஆ ஆ ஆ

வானம் எனும் வீதியிலே
குளிர் வாடை எனும் தேரினிலே
ஓடி வரும் மேகங்களே கொஞ்சம் நில்லுங்கள்
எங்கள் உறவு என்றும் வாழ்க என்று வாழ்த்து சொல்லுங்கள்
நெஞ்சார வாழ்த்து சொல்லுங்கள்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் ரசிக்கும் பாடல்... நன்றி சார்...

Raashid Ahamed சொன்னது…

இந்த பாடல் மட்டுமல்ல இந்த படத்தில் இடம்பெற்ற ”நீலக்கடலின் ஓரத்தில்” என்ற டிஎம்எஸ் பாடிய பாடலும் ஒரு தேனமுது.

கருத்துரையிடுக