பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 22 நவம்பர், 2013

இரண்டாம் உலகம்

இரண்டாம் உலகம்

எனது 55 வயது வாழ்வில் முதன் முறையாக திரையரங்கில் திரைப் படம் முடிந்தவுடன் மக்கள் ஹோ எனக் கத்திகொண்டு திரையரங்கின் வாசலைத்தேடி ஒருத்தரை ஒருத்தர் தாண்டிக் கொண்டு ஓடிய காட்சி இன்றுதான் கண்டேன். அவ்வளவு அருமையான படம். சொந்த தயாரிப்பாக இருந்தால் செல்வரங்கனின் அப்பன் காசு எள்ளுதான். அடுத்தவன் தயாரிப்பாய் இருந்தால் செல்வரங்கனின் இரண்டாம் உலகம் பார்ட் 2 எடுத்தால் தலையில் துண்டு நிச்சயம்.
இயக்குனர் வீட்டில் ஒரு 10 ஆங்கிலப் பட டி வி டி இருந்திருக்கும் போல. தெருவில் உள்ள ஈர சாணியெல்லம் பொறுக்கி வந்து காலால் மிதித்து நம் முதுகில் வரட்டி அடித்திருக்கிறார். எஸ் பி பி, வைரமுத்து, ஆரியா, அனுஷ்கா உழைப்பெல்லாம் வீணாக்கி இருக்கிறார். இசையைப் பற்றி சொல்லவேண்டாம்.
ஏதோ ஒரு படம் பெரும் பொருட்செலவில் வெளி நாடுகளில் போய் எடுத்தால் ரசிகர்கள் அப்படியே உச்சி குளிர்ந்து ஆடுவார்கள் என்ற நினைப்பு போலிருக்கிறது.
இவர் இனி மூடிக் கொண்டிருப்பது நல்லது என்றே நினைக்கிறேன்.
இயக்குனர்கள் தங்கள் பவுசை2 அல்லது 3 படங்களிலேயே தெரிந்துக் கொள்ள வேண்டும். இவனுங்களுக்கும் ஃபைனான்ஸ். பண்ணுகிறாங்களே அவனுங்களை சொல்லனும்.

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க மிக்க நன்றி ஐயா...

Unknown சொன்னது…

வொய் ப்லாட் சேம் ப்ளட்

பால கணேஷ் சொன்னது…

ஹப்பா... உங்களை இவ்வளவு பொங்கி, காட்டமான விமர்சனம் எழுத வைத்து விட்டதே அசோக் இந்தப் படம்...? மற்ற தளங்களில் விமர்சனங்கள் எல்லாம் ஆங்கிலப் படம் போல நேர்த்தி, அருமையான காட்சிப்படுத்தல் என்றே சொல்லியிருக்கிறார்கள். படம் ‘படுத்தல்’ என்று நீங்கதான் அழுத்திச் சொல்லியிருக்கீங்க!

பெயரில்லா சொன்னது…

வணக்கம்
ஐயா
சொல்வது உண்மைதான்...

-நன்றி-
-அன்படன்-
-ரூபன்-

Indian சொன்னது…

I really cant understand why people anticipate a 'normal', entertainer from a director like him!.

Unknown சொன்னது…

இங்கு கருத்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த படத்தினைப் பற்றிய எனது விமர்சனம் முழுக்க முழுக்க என்னுடைய கருத்து. படம் பார்த்தப் பின் instant ஆக எனக்கு தோன்றியது. யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. சிலர் அடுத்தவர்கள் என்ன சொல்லுவார்களோ என நினைத்து நான் எழுதவில்லை. என்னைப் போலத்தான் பல தமிழ் நண்பர்கள் நினைத்திருப்பார்கள். செல்வரெங்கன் ஒரு ஜீனியஸ். அவரைப் போல படமெடுக்க முடியாது. அவர் சொல்ல வருவது உங்களுக்கு, அதாவது சாமானிய தமிழனுக்கு புரியது என்பவர்கள் இங்கே வரவேண்டாம். ஒரு திரைப் படம் என்றால் ஜனரஞ்ஜகமாக இருக்க வேண்டும். ஹாலிவுட் அளவில் என்றால் அவர்களுக்காவது புரிய வேண்டும். முக்கியமாக ஒரு திரைப் படம் என்பது ஒன்று குழந்தைகளை திருப்திபடுத்த வேண்டும் அல்லது பெரியவர்களுக்கு புரிய வேண்டும். இந்த இரண்டும் இல்லையென்றால்....? அதுதான் எனக்கு கோபத்தை கொடுத்தது. அதற்கு பொருள் செலவே இல்லாமல் :சொன்ன புரியாது", "யா யா" போன்று படங்களை எடுத்துவிட்டால் நமக்கென்ன என்று இருந்துவிடலாம். இவற்றை நாம் ஏதாவது விமர்சனம் செய்தோமா?

பதிவுலகில் செல்வரங்கனை விட்டுக் கொடுக்கக் கூடாது என்று சிலர் இந்தப் படத்தை அஹா ஓஹோ என எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அது அவர்கள் கருத்து. ஆனால் ஒரு சாதாரண தமிழன் எப்படி பார்க்கிறான் என்பதுதான் முக்கியம். நான் சாதாரண தமிழன். வளைகுடா நாடுகளில் அதுவும் தோஹாவில் வாரத்திற்கு ஒரு படம் மட்டுமே வரும். அதுவும் தினம் ஒரு காட்சி மட்டுமே இடம் பெறும். எங்களுக்கு பொழுது போக அது மட்டுமே இங்கே. இப்படியா எங்கள் பொழுது போக வேண்டும்? இங்கு எந்தப் படம் வந்தாலும் நாங்கள் பார்த்தே ஆகவேண்டும். நல்லாயிருந்தால் குதூகளிப்போம். இப்படிப் பட்ட படமாக இருந்தால் காறிதான் துப்புவோம். மன்னிக்கவும். ஒரு டிக்கெட் இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 500 ஆகிறது. இப்படியாக செல்வரங்கனின் கருத்தை எங்களிடம் திணிக்க இதுதான் வழியா? பலர் இங்கே செல்வரெங்கன் படமா...மெண்டல் படமாகத்தானே எடுப்பார் என்பது இங்குள்ளவர்களின் பொதுவானக் கருத்து. மாத்தி யோசிங்கப்பா என சொல்ல தோன்றுகிறது.
Indian புரிந்துக் கொள்ளவார் என நம்புகிறேன்.
கீழே உள்ள சுட்டியை பாருங்கள்.

http://www.sairose.net/

Natchatran சொன்னது…

செல்வராகவன் படம் ஆழ்ந்து பார்த்தல் தான் பல கோனங்க்களில் புரியும்

கருத்துரையிடுக