பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 நவம்பர், 2013

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

இந்தத் திரைப் படம் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். இந்த நிலையில் எங்கே நான் பாடல் காட்சிக்கு அலைவது?
அழகான தங்க வரிகளைக் கொண்ட பாடல்.

நிழல்கள் படத்தில் வரும் 'இது ஒரு பொன் மாலை பொழுது' என்ற பாடல் இந்த சாயலில் உள்ளதோ?

திரைப் படம்: பௌர்ணமி
பாடியவர்: S P B

http://asoktamil.opendrive.com/files/Nl8yNDA5MDEyN19ZNzU4a18xZTBh/kalam%20enakkoru.mp3
ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹே ஹே

காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

கைகளை போல் ஒரு நண்பன் இல்லை
கால்களை போல் ஒரு சொந்தம் இல்லை
உழைப்பதை போல் ஒரு இன்பம் இல்லை
இதை உணர்ந்தவர் வாழ்வில் கவலை இல்லை

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

எங்கே உருவம் அசைந்தாலும்
அங்கே நிழலும் சதிராடும்
என் இதயம் எங்கே இருந்தாலும்
அது உறவை தேடி இசை பாடும்


காலம் எனக்கொரு பாட்டெழுதும்
காற்று வந்தே இசை அமைக்கும்
தாளம் போடும் நீர் அலைகள்
தாவி பாயும் நினைவலைகள்

காலம் எனக்கொரு பாட்டெழுதும்

ஹே ஹே ஹோ ஹோ ஹே ஹே

4 கருத்துகள்:

Covai Ravee R சொன்னது…

அசோக் சார் நானும் இணையத்தில் தேடிப்பார்த்தேன் படத்தின் தகவல்கள் கிடைத்த பாடில்லை. பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் என்று ஒரு தளத்தில் பார்த்தேன் அவர் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியின் சுட்டியை இங்கே வழங்கியிருக்கிறேன் அவரின் கருப்பு வெள்ளை படங்களூடன் ஸ்வாரசியமான தகவல்களும் சொல்லியிருக்கிறார். நீங்களூம் படியுங்கள் அறிதான பாலுஜி பாடலை வழங்கிய தங்களுக்கு பாலுஜி ரசிகர்கள் சார்பாக நன்றி சார்.

Asokaraj Anandaraj சொன்னது…

நன்றி கோவை ரவி ஸார், ஆனால் சுட்டியை காணவில்லையே?

Covai Ravee R சொன்னது…

மன்னிக்கவும்.. தங்களின் இந்த பாடல் பதிவை பா.நி.பா வலைப்பூவில் தொடர்புகொண்டு அதில் குறிப்பிட்டுள்ளேன். இதோ நக்கீரன் சுட்டி

http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=15883

பாடல் கேட்டேன் இரண்டே சரணங்கள் இருந்தாலும் மிகவும் இனிமையாக இருந்தது. மீண்டும் நன்றி சார்.

Asokaraj Anandaraj சொன்னது…

நன்றி கோவை ரவி ஸார்

கருத்துரையிடுக