பின்பற்றுபவர்கள்

திங்கள், 11 நவம்பர், 2013

வண்ணாத்திப் பூச்சி வயசென்ன ஆச்சி

கால்களில் தாளம் போட வைக்கும் ஒரு முத்தான சந்திர போஸ் பாடல். மிக சாதாரணமாக எடுக்கப்பட்ட படம். தமிழகத்தில் வெற்றி நடைக் கொண்டு ஓடியது எனலாம்.
இளமையும் இசையும் போட்டியிட்டு வருகிறது.

திரைப் படம்: பாட்டி சொல்லைத் தட்டாதே (1988)
இசை: சந்திர போஸ்
நடிப்பு: மனோரமா, S S சந்திரன், பாண்டியராஜன், ஊர்வசி
இயக்கம்: ராஜசேகர்
பாடியவர்கள்: S P B, K S சித்ரா
பாடல்: வைரமுத்து என நினைக்கிறேன்






ட ட ட ட டா டா டான்
ட ட ட ட டா டா டான்

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

உள்ளத்தில் தொட்ட இன்பம் தீரவில்லே
உள்ளங்கை சூடு இன்னும் ஆறவில்லே

பாவைக்கு அந்த இன்பம் தூரமில்லை
பாலுக்கு ஆடை ஒன்னும் பாரமில்லை

அம்மாடி அப்போது யாருமில்லே
செந்தாழம் பூவுக்கு சேலையில்லே

ஆபத்து வந்தாலே பாவமில்லை
ஆணென்ன செஞ்சாலும் கேள்வி இல்லே

தேன் கையில் ஒட்டாமே தேன் எடுக்கத் தெரியலே

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

என்னென்ன ஆனதின்னு தோனவில்லை
கற்பனை பண்ணக் கூட ஞானமில்லே

கற்பனைக் காதலுக்கு தேவையில்லே
கைத் தொட்டு சொல்லித் தாரேன் வாடிப் புள்ளே

என்னை நீ காப்பாற்றும் காரணமா
என்றாலும் எல்லைகள் மீறனுமா

அம்மாடி நான் என்ன சூனியமா
அப்பப்பா நான் கூட ஞானியம்மா

ஆளானப் பெண்ணையெல்லாம் ஆதரிக்கத் திட்டமா
வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
உன்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு

வண்ணாத்திப் பூச்சி
வயசென்ன ஆச்சி
உள்ளூரு முழுக்க
என்னைப் பத்தி பேச்சு
என்னவோ இருக்கு
எனக்கும் கிறுக்கு


1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

நீங்கள் சொன்னபடி தாளம் போட்டு தலையசைக்கவைக்கும் பாடல் பா.நி.பா தளத்தில் தொடர்பு கொடுத்துள்ளேன். நன்றி.

http://myspb.blogspot.in/2013/11/1422.html

கருத்துரையிடுக