பின்பற்றுபவர்கள்

சனி, 23 நவம்பர், 2013

பாரிஜாதம் பகலில் பூத்ததே

இளையராஜாவின் வழக்கமான பாடல். பாடும் குரல்களில் இனிமை சொட்டுகிறது.

திரைப் படம்: நிலவு சுடுவதில்லை (1984)
இசை: இளையராஜா
பாடல்: முத்துலிங்கம்
பாடியவர்கள்: S ஜானகி, K J யேஸுதாஸ்
இயக்கம்: K ரெங்கராஜ்
நடிப்பு: சிவகுமார், ராதிகா

http://asoktamil.opendrive.com/files/Nl8yNjA5NDc2MV83UUk4eV8zZjQz/Parijadham%20Pagalil.mp3






பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள வின்மீனை அள்ளி வந்து
மாலை கட்ட சொல்லாதோ கண்கள் ரெண்டு

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே

ஏட்டில் இல்லாத தேவாரமே
யாரும் சூடாத பூவாரமே

என்றும் என் வாழ்வின் ஆதாரமே
நெஞ்சம் பாடாதோ பூபாளமே

இளம் பூவே 
இளம் பூவே
மனம் நீராடிடும்
வேளை சுக வேளை

மலர் மேலே
இளம் காற்றாடிடும் சோலை
புது சோலை

அன்பே இங்கே வா வா என்னருகினில்
பாரிஜாதம் பகலில் பூத்ததே

ஆசை எண்ணங்கள் வேரோடுதே
ஓசை இல்லாமல் யாழ் மீட்டுதே
எங்கும் சிந்தாத சிந்தாமணி
ஹோ
என்றும் நீயே என் தேமாங்கனி

அலை போலே 
அலை போலே
மனம் விளையாடிடும் நாளே
திருநாளே

நதி போலே என்னை நீ நாடலாம்
மானே இளம் மானே

அன்பே இங்கே வா வா என்னருகினில்

பாரிஜாதம் பகலில் பூத்ததே
காதல் தேவன் கையில் சேர்த்ததே
வானில் உள்ள வின்மீனை அள்ளி வந்து
மாலை கட்ட சொல்லாதோ கண்கள் ரெண்டு

ல ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக