பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 பிப்ரவரி, 2014

புல்லாங்குழல் மொழி தமிழ் தமிழ் தமிழ்

சிந்தாள் சோப்புக்கு பாடலாசிரியர் விளம்பரம் செய்திருக்கிறார் போலிருக்கிறது. தமிழிலில் நான் இதுவரை சிந்தாள் என வார்த்தை கேள்விப் பட்டதில்லை காவடி சிந்து என உண்டு. எதுகை மோனைக்காக வந்தாள் காவடிச் சிந்தாள் என எழுதியிருப்பார் போலிருக்கிறது. அதே போல கண்ணான்.
இந்த அர்த்தமற்ற பாடல் வரிகளுக்கு சிரமப்பட்டு இசையும் குரலும் அமைத்திருக்கிறார்கள் பாவம்.
இந்தப் பாடலுக்கு நடித்திருக்கும் பெண் ஸ்ரீரஞ்சனி, நடிகை ஊர்வசியின் தங்கை என அறிகிறேன். எத்தனை பெண்கள் ஊர்வசி வீட்டில்?

திரைப்படம்: ஊரும் உறவும் (1982)
இசை: சங்கர் கணேஷ்
குரல்கள்: எஸ் பி பி, வாணி ஜெயராம்
பாடல்: தெரியவில்லை
இயக்கம்: மேஜர் சுந்தர்ராஜன்???
நடிப்பு: சிவாஜி, விஜயா, நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி

http://asoktamil.opendrive.com/files/Nl8zMzEwMzcwNl9sdHYwRl9kYmRh/PullanguzhalMozhi.mp3





புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
வந்தாள் காவடி சிந்தாள்

கண்ணன் கருமுகில்
குழல் குழல் குழல் என
காதல் முகம் மதி
நிழல் நிழல் நிழல் என
சொன்னான் காவியக் கண்ணான்
சொன்னான் காவியக் கண்ணான்

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்

பாவை இளமனம்
சுகம் சுகம் சுகம் என
நாளை ஒரு தினம்
வரும் வரும் வரும் என
பார்த்தாள் கண் பூத்தாள்
பார்த்தாள் பார்த்த கண் பூத்தாள்

மோகம் எனும் கனல்
அணை அணை அணையென
தியாகம் எனும் புனல்
மழை மழை மழை என
பொழிந்தான் தன்னை மறந்தான்
பொழிந்தான் தியாகத்தில் நனைந்தான்

வெள்ளை மல்லிகைகள்
சிந்தும் புன்னகையில்
விரகமும் தனிமையும் மறைத்திருந்தாள்

வெள்ளை மல்லிகைகள்
சிந்தும் புன்னகையில்
இருவரும் உலகினை மறந்திருந்தார்

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்

கண்ணன் கருமுகில்
குழல் குழல் குழல் என
காதல் முகம் மதி
நிழல் நிழல் நிழல் என
சொன்னான் காவியக் கண்ணான்

தென்றல் நடந்தது
சிலு சிலு சிலு என
தேகம் குளிர்ந்தது
குலு குலு குலு என

மேகம் யாத்திரை போகும்
கொடைக்கானலில்
சிறு சிறு பனித் துளி
பன்னீர் தெளித்தது
குறு குறு எனும்படி

பூவும் பஞ்சனை போடும்
அந்த வானிலவு இன்று தேனிலவு
அழகிய ஒலி மழை அமுதங்களே ஹே ஹே

அந்த வானிலவு இன்று தேனிலவு
அழகிய ஒலி மழை அமுதங்களே

புல்லாங்குழல் மொழி
தமிழ் தமிழ் தமிழ் என
பூவை இதழ் முத்து
சிமிழ் சிமிழ் சிமிழ் என
வந்தாள் காவடி சிந்தாள்
வந்தாள் காவடி சிந்தாள்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதிகம் கேட்டிராத பாடல்... நன்றி ஐயா...

கருத்துரையிடுக