பின்பற்றுபவர்கள்

சனி, 8 பிப்ரவரி, 2014

கண்ணா நீ எங்கே வா வா நீ இங்கே

இந்தப் பாடலில் குழந்தையாக நடித்திருப்பது சாரதா ப்ரீதா. திருமதி ஜானகி அம்மா குழந்தை குரலில் அருமையாக பாடியிருந்தாலும், இனிமையான மென்மையான அவரது குரல் பிற்காலங்களில் கொஞ்சம் வரண்டதாக காணப்பட்டதற்கு அவர் இது போல குரலை மாற்றி குழந்தையாகவும் கிழவியாகவும் இப்படி பலதரப் பட்ட வகையில் பாடியதே காரணம் என நான் நினைக்கிறேன். இது என்னுடைய கருத்து.

அன்பர்களுக்கு இதில் சம்மதம் இல்லையென்றால்முன்பு தூக்கமும் கண்களை தழுவட்டுமே, காலையும் இரவும் சந்திக்கும் இடத்தில் போன்ற பாடல்களை  கேட்டுப் பார்த்தால் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்.

பாடல் வரிகள் நன்றாகவே உள்ளது.

திரைப் படம்: ருசி கண்ட பூனை  (1980)
நடிப்பு: சரிதா, சுதாகர்
இசை: இளையராஜா
இந்தப் பாடலை யார் எழுதியது என தெரியவில்லை. இந்தப் படத்தின் மற்ற பாடல்களை திரு பஞ்சு அருணாசலம் எழுதியதாகத் தெரிகிறது.
இயக்கம்: P முத்துராமன் என்பதாக இணையத்தில் உள்ளது.

http://asoktamil.opendrive.com/files/Nl8zMTA3ODIyOF9oWGhWQl85OWRl/kannaa%20nee%20inge%20vaa.mp3





கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
நீ இருக்குமிடம் எனக்கே தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா
கண்ணா
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

உன்னோட நான் விளையாடனும்
வருவாயா கண்ணா
உன் புல்லாங்குழல் நான் கேட்கனும்
ஊதுவாயா கண்ணா

கோபியர்களுடனே விளையாடினாயாமே
பசுக்களெல்லாம்  கூட
உன் புல்லாங்குழலை கேட்டுச்சாமே
நான் கேக்க கூடாதா
சொல்லு நீயே சொல்லு

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே

பெரிய பாம்பைக் கொன்னியாமே
உனக்கு பயமே இல்லியா
ராட்சசதரையும் கொன்னியாமே
அப்பாடா உனக்கு அவ்வளவு தைரியம்
பெரிய மலையை ஒரு விரலால் தூக்கினியாமே
உனக்கு அவ்வளவு பலமிருக்கா
சொல்லு
வெண்ணைத் திருடி தின்னியாமே
திருடக் கூடாது
கேட்டு வாங்கிதான் சாப்புடனும்
வெண்ணைத் திருடி தின்னியாமே
ம்ம்ம்
எனக்கும் கொஞ்சம் தாயேன்
தா
மண்ணை அள்ளித் தின்னியாமே
சீச்சி மண்ணை யாராவது திம்பாங்களா
மண்ணை அள்ளித் தின்னியாமே
அய்யோ அது எனக்கு வேண்டாம்
வாய்க்குள்ளேயே நீ உலகத்தையே காட்டினியாமே
ஆமா இவ்வளவு சின்ன வாய்க்குள்ளே
அவ்வளவு பெரிய உலகத்தை எப்படிதான் காட்டினே
பொம்மை உலகம் காட்டினியா
உலகத்தையே வாய்க்குள்ளேயே நீ காட்டினியாமே
எனக்கும் காட்ட மாட்டாயா
எனக்கும் காட்ட மாட்டாயா

கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே
நீ இருக்குமிடம் எனக்கே தெரியாதே
நீயே என்னிடம் ஓடி வா கண்ணா
கண்ணா
கண்ணா நீ எங்கே
வா வா நீ இங்கே




1 கருத்து:

rajkumar சொன்னது…

இந்தப் பாடலை எழுதியவர் எஸ் ஜானகி அம்மாதான்

கருத்துரையிடுக