பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

எல்லாம் தெரிகிறது எனக்கு எல்லாம் தெரிகிறது

இன்றைக்கு இந்த எனது பதிவு ஒரு சரியான, பார்வைக்குத் தகுதியானதாக இருப்பதற்குக் காரணமான திரு திண்டுக்கல் தனபால் அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றிகள். இருக்கும் மிச்ச சொச்ச குறைகளையும் களைய அவர் உதவி செய்வார் என நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

இன்றைய பதிவில் கிரேசி மோகனின் வெற்றிபெற்ற "மேரேஜஸ் மேட் இன் சலூன்" என்ற நாடகம் இயக்குனர் திலகம் K பாலசந்தர் அவர்களால் படமாக்கப் பட்டு அவ்வளவாக வெற்றி நடை போடவில்லையென்றாலும் ஓரளவிற்குக் கலகலப்பாக ஓடிய பொய்க்கால் குதிரை.
மிக மிகச் சாதாரணமான ஒரு பாடல், எஸ் பி பியின் கைபட்டு (வாய்ப்பட்டு?) எவ்வளவு எல்லாம் பிரமாதமாக்கப் பட்டுள்ளது என்பதைக் கவனிக்கும் போது.... எல்லாம் தெரிகிறது.....ரசித்துக் கேட்டால் இனிமையான பாடல். ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் எனச் சொல்ல வைக்கிறது.


திரைப் படம்: பொய்க்கால் குதிரை (1983)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: வாலி, ராமகிருஷ்ணா, விஜி
பாடல்: வாலி
இயக்கம்: K பாலசந்தர்
கதை: கிரேஸி மோகன்

http://asoktamil.opendrive.com/files/Nl8zMjcwNzQ4M191Uk5BeF8zODI0/Ellaam%20Therigiradhu%20-%20Hot%20Tamil%20Song%20-%20Poikkal%20Kuthirai.mp3

<iframe src="https://www.opendrive.com/listen/Nl8zMjcwNzQ4M191Uk5BeA" height="25" width="297" style="border:0" scrolling="no" frameborder="0" allowtransparency="true"></iframe>




ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
உயர்ந்து நிற்கும் மாமலையே
உன்னை மேகம் தொடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது
கொஞ்சம் இறங்கி வந்தால்
நானும் தொடுவேன் ஆசை சுடுகிறது

ஓடிடும் ஓடையே பூமியின் ஆடையே
உன்னைதான் தீண்டிட ஏங்குது வாடையே

அழகு எல்லாம் ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
நனைந்து நிற்கும் தாமரையே
எங்கும் தண்ணீர் வழிகிறது
பக்கம் நெருங்கி வந்தால்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது
பக்கம் நெருங்கி வந்தால்
ஈரம் துடைக்க கைகள் துடிக்கிறது

நாளெல்லாம் மேனியை
நூலிடை நீந்துமோ
நான் அதை பார்க்கையில்
என் மனம் தாங்குமோ

அழகு எல்லாம் ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது

திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அழைக்கிறது
திரண்டு நிற்கும் பால் நிலவே
உன்னை வானம் அழைக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன்
தேகம் கொதிக்கிறது
மண்ணில் தவழ்ந்து வந்தால்
நானும் அணைப்பேன்
தேகம் கொதிக்கிறது

பார்வைகள் தேடிடும்
பேரெழில் பிம்பமே
நீ எனை சேர்ந்த பின்
வேறெது இன்பமே

அழகு எல்லாம் ஹா ஹா ஹா தெரிகிறது
எனக்கு எல்லாம் தெரிகிறது
மனக் கண்ணுக்கு முன்னாலே
ஒரு கண்ணாடியை போலே
அழகு எல்லாம் தெரிகிறது
எல்லாம் தெரிகிறது
எனக்கு எல்லாம் ம் ம் ம் ம் ஹா ஹா ஹா




2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிக்க நன்றி ஐயா...

ரசிக்க வைக்கிறது பாடல் வரிகள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பதிவில் உள்ள (1) தரவிறக்க பாடல் script-யையும் (2) வாசகர்கள் பாடல் கேட்பதற்கான Audio script-யையும் பதிவு எழுதும் compose-ல் உள்ளது... அதை அப்படியே copy செய்து கொண்டு அதன் பக்கத்தில் உள்ள HTML-யை சொடுக்கி, அங்கு இந்தப் பதிவில் உள்ளது போல் (கதை: கிரேஸி மோகன் கீழ்) paste செய்யவும்... அவ்வளவு தான்...

மிச்ச சொச்ச குறைகள் இது தான் என்று நினைக்கிறேன்...

கருத்துரையிடுக