பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 21 மார்ச், 2014

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

 அன்று பலரும் சிலாகித்து ரசித்த பாடல்.
வித்தியாசமான பின்னணி இசையில் பிண்ணியிருக்கிறார் இளையராஜா. ஒரு முறைக் கேட்டால் ரொம்ப நேரம் மனதை விட்டு அகலாத பாடல்.
பாடிய குரல்களின்  இனிமையே தனிதான்.

திரைப்படம்: உன்னை நான் சந்தித்தேன் (1984)
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ், வாணி ஜெயராம்
 நடிப்பு: சிவகுமார், ரேவதி, சுரேஷ் 
இயக்கம்: K ரெங்கராஜ் 
பாடல்: வைரமுத்துவாக இருக்கலாம்.



http://asoktamil.opendrive.com/files/Nl8zNDc4NjAyMV9WUUd6NV8yOGQy/Unnai%20kaanum%20neram%20nenjam.mp3














ஆஆஆஆஆஆஆஆஆஆ
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம்தோறும்
காலம் நேரம் ஏதுமில்லை
உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

கண்ணில் மின்னும் காதல் ஜோதி
கன்னி மேனி மானின் ஜாதி

கண்கள் சொல்லும் காமன் சேதி
கண்டும் என்ன நாணம் மீதி

ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்
ஒரு மாலை தோளில் சேரும்
திருநாளில் நாணம் தீரும்

தொட வேண்டி கைகள் ஏங்கும்
படவேண்டும் பார்வை எங்கும்

இந்த பார்வை ஒன்று போதும்
போதும் இடைவேளை
மீதி இனி நாளை

மாலை வேளை வீணாய் போகும்
இந்த பார்வை ஒன்று போதும்

கண்ணால் உன்னைக் கண்டால் போதும்
பன்னீர் பூக்கள் பந்தல் போடும்

மன்னா உன்னை மார்பில் தாங்கும்
பொன்னாள் கண்டே பெண்மை தூங்கும்

மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும்  ஆயுள் காலம்
 மடி மீது சாயும் சாபம்
தரவேண்டும்  ஆயுள் காலம்

பலகோடி காலம் வாழ
பனி தூவி வானம் வாழ்த்தும்

உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்
ராகம் பல நூறு
பாடும் தினம் தோறும்
காலம் நேரம் ஏதும் இல்லை
 உன்னைக் காணும் நேரம் நெஞ்சம்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல் சார்... நன்றி...

jeyaxerox balu சொன்னது…

எம்.ஜி. வல்லபன்

கருத்துரையிடுக