பின்பற்றுபவர்கள்

சனி, 29 மார்ச், 2014

சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா


 சீர்காழியின் இளமை குரலில், அழகாக வடிவமைக்கப் பட்ட பாடல். மிக அமைதியாகவும் பண்பான முறையிலும் படமாக்கப்பட்டுள்ளது.
சீர்காழியின் தமிழ் உச்சரிப்பை நாம் கவனிக்க வேண்டும்.
பாடல் கவிதை வரிகளும் தெளிந்த நீரோடை போல தங்கு தடையின்றி ஓடுவது போலிருக்கிறது.

சோகமான படம் என்பதாக எனக்கு ஞாபகம். ரொம்பவும் ஏழ்மையான ஒரு குமாஸ்தா தன்  மகள்களை வைத்துக் கொண்டு எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறாரென்பது கதை.
கன்னட நடிகை ஆர்த்தி அறிமுகமான தமிழ் படம்.

திரைப் படம் : குமாஸ்தாவின் மகள் (1974)
இயக்கம்: A P நாகராஜன்
இசை: V குமார்
நடிப்பு: சிவகுமார், ஆர்த்தி
பாடியவர்: சீர்காழி S கோவிந்தராஜன்
மறற விபரங்கள் தெரியவில்லை.



http://asoktamil.opendrive.com/files/Nl8zNTI1MTMzN19CczdPUl9hNWI1/Sirikiraley_Kanni_Muthamma_Song.mp3








சிரிக்கிறாளே கன்னி முத்தம்மா
என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

ஆற்றங்கரையினிலே
கன்னி முத்தம்மா
ஆற்றங்கரையினிலே
கன்னி முத்தம்மா
காற்றாக நடை நடந்தாள்
கன்னி முத்தம்மா
தென்றல் காற்றாக
நடை நடந்தாள்
கன்னி முத்தம்மா

பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
பச்சைக் கிளியாக
கானம் பாடும் குயிலாக
பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
வந்து பக்கம் நின்று கொஞ்சுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா
மண்ணென்னும் தொட்டில் கட்டி
கன்னி முத்தம்மா
அன்பு மகனாக ஆசை வைத்தாள்
கன்னி முத்தம்மா

விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
விண்ணென்னும் வெளியினிலே
கன்னி முத்தம்மா
விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
புது விளையாட்டு காட்டுகின்றாள்
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா

என்னைப் பார்த்து சிரிக்கிறாளே
கன்னி முத்தம்மா
அன்னையவள் இயற்கையம்மா
கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா
எந்தன் கன்னி முத்தம்மா ஆ ஆ ஆ

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசிக்க வைக்கும் பாடல் + வரிகள்...

NAGARAJAN சொன்னது…

இசை குன்னக்குடி வைத்தியநாதன். பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் .

கருத்துரையிடுக