தமிழர்கள் அனைவருக்கும் எமது இனிய
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள். நான் வேலை செய்யும் கப்பலில் மோசமான இணைய இணைப்பின்
காரணமாகவும் அதைத் தொடர்ந்து எனது
தந்தையாரின் மறைவும் என்னை நீண்ட நாட்கள் இணையம் பக்கம் வரவிடவில்லை. அடுத்த வாரம் முதல் சீராக தொடர உத்தேசம். நன்றி.
இப்போதைக்கு இந்த
இனிய பாடலைக் கேட்டு மகிழ்வோம்.
திரைப் படத்தில் பாகேஸ்வரி இராகத்தில் அமைந்த இந்த இனிமையான பாடலை தணிக்கையில் நீக்கிவிட்டார்கள்.
திரைப்படம்: குணசுந்தரி (1955)
குரல்: A M ராஜா
நடிப்பு: ஜெமினி , சாவித்திரி
இசை: கண்டசாலா
இயக்கம்: K காமேஷ்வரராவ்
கலையே உன் விழி கூட கவி பாடுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
நிலவோடு விளையாடும் தாரா உன்னாலே
அலை மோதும் வேளை வாராய் முன்னாலே
அலை மோதும் வேளை வாராய் முன்னாலே
அனுராக நிலையே பாராய் கண்ணாலே
அனுராக நிலையே பாராய் கண்ணாலே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி
இளங்காதல் அமுதாகும் ஏகாந்த ராணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இசையோடு பாடும் வேதாந்த வாணி
இணை யாரும் இல்லையே எழில் மேவும் மேனி
இணை யாரும் இல்லையே எழில் மேவும் மேனி
கலையே உன் விழி கூட கவி பாடுதே
தங்க சிலையே உன் நிழல் கூட ஒளி வீசுதே
ஒளி வீசுதே
கலையே உன் விழி கூட கவி பாடுதே
4 கருத்துகள்:
May I know what keyboard/processor you use for typing in Tamil?
My friend would love to write, but he doesn't know how to type. Please suggest.
Thank you.
தந்தையை இழந்து வாடும் தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், மன அமைதிபெற இறைவனை வேண்டுகிறோம் (நாம் இறைவனிடமிருந்து வந்தவர்கள், அவனிடமே மீள வேண்டியவர்கள்)
உண்மையுடன் நன்றிகள் ராஷீத்.
நிக்கில்,
thiruwin எனும் இணையத்தில் இந்த வசதி உள்ளது. மேலும் google input tools சென்றாலும் இந்த வசதி கிடைக்கும். இன்னமும் குழப்பமாக இருந்தால் தெரிவிக்கவும். Links அனுப்புகிறேன். நன்றி.
கருத்துரையிடுக