பின்பற்றுபவர்கள்

புதன், 31 டிசம்பர், 2014

தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா

எனது இனிய நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் இப்பொழுது அவ்வளவாக இணைய வசதியில்லாத அட்லாண்டிக் கடலின் நடுவே எண்ணெய் கப்பலில் இருப்பதால் உங்களுடன் உறவாட முடியாமல் இருக்கிறேன். இன்று போல அவ்வப்போது இணைய வசதிக் கிடைத்தால் பாடலை வழங்குவேன். அடுத்த வாரம் நிலத்திற்கு வந்துவிடுவேன். தொடர முயற்சிக்கிறேன். நன்றி.

இன்றைய புத்தாண்டு ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களுடன் நாம் நமது தாய்த் திரு நாட்டையும் மறந்துவிடாமல் இருக்க இந்தப் பாடல். ஆங்கில வழக்கங்களை நாம் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டாலும் நமது சொந்த காலாச்சாரத்தையும் மறக்காமல் இருக்க வேண்டுகிறேன்.

"ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ"


திரைப்படம்: கப்பலோட்டிய தமிழன் (1961)
குரல்: திருச்சி லோகநாதன்
இசை: G ராமநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
நடிப்பு: சிவாஜி, பத்மினி, ஜெமினி
இயக்கம்: பி. ஆர். பந்துலு







தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா
இப் பயிரை
கண்ணீரால் காத்தோம்
கருகத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம்
           
எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த

எண்ணமெல்லாம் நெய்யாக 
எம்முயிரினுள் வளர்ந்த
வண்ண விளக்கிது மடியத் திருவுளமோ
தண்ணீர் விட்டோ வளர்த்தோம் 

ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
ஓராயிரம் வருடம் ஓய்ந்து கிடந்த பின்னர்
வாராது போல வந்த 
மாமணியைத் தோற்போமோ
மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து

மாதரையும் மக்களையும் 
வன் கண்மையாற் பிரிந்து
காதல் இளைஞர் கருத்தழிதல் காணாயோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ

தர்மமே வெல்லுமென்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ
கர்ம விளைவுகள் யாம் 
கண்டதெல்லாம் போதாதோ
எந்தாய் நீ தந்த இயற்பொருளெலாமிழந்து
நொந்தார்க்கு நீயின்றி நோவழிப்பார் யாருளரோ

மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
மேலோர்கள் வெஞ்சிறையில் 
வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் 
நோவதுவும் காண்கிலையோ
 
எண்ணற்ற நல்லோர் இதயம் புழுங்கி 
இரு கண்ணற்ற சேய் போல் 
கலங்குவதும் காண்கிலையோ

1 கருத்து:

Unknown சொன்னது…

படிக்கும்போதே கண்ணீர் வருகிறது. பாரதியார் great.

கருத்துரையிடுக