பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 9 டிசம்பர், 2014

உள்ளம் ஒரு கோவில்...Ullam oru kovil..

இதமான இசை, பாடும் குரல்கள், பாடல் வரிகள். எல்லாமே இதம்தான். எம் ஜி யாருக்காக பாடிய பாடல் போலவே தெரியவில்லை. அவ்வளவு மென்மை டி எம் எஸ் குரலில். இனிமை.

திரைப்படம்:  தாலி பாக்கியம்(1966)
இசை: K V மகாதேவன்
குரல்கள்: டி எம் எஸ், P சுசீலா

நடிப்பு: எம் ஜி யார்,   சரோஜா தேவி
பாடல்: வாலி
இயக்கம்: K B நாகபூஷணம்








உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்

நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே
நான் குளிக்கும் நல்ல மஞ்சளுக்கு
திரு நாயகனாய் நீ வந்தாயே

பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே
பூவிதழோரம் தேன் எடுத்து
இளம் புன்னகையில் நீ தந்தாயே

ஆனந்த கடலின் அலை என்பேன்

உன்னை ஆனிப் பொன்னுடல் சிலை என்பேன்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்

பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகலிரவாய் நான் படைத்து வைப்பேன்
பருவம் தரும் நல்ல விருந்தாவேன்
என்னை பகலிரவாய் நான் படைத்து வைப்பேன்

பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்
பழகும் தமிழ் வந்த வழியாவேன்
வண்ண பனி இதழால்
தேன்மொழியுரைப்பேன்

முன்னழகோடு பின்னழகை
என் மன சிமிழில்
நான் அடைத்து வைப்பேன்
முன்னழகோடு பின்னழகை
என் மன சிமிழில்
நான் அடைத்து வைப்பேன்

தோள்களில் கொடி போல் படர்ந்திருப்பேன்

உன்னை சுமந்து கொண்டே நான் நடந்திருப்பேன்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கண்கள் அதன் வாசல்
பெண்ணின் நாணம் அங்கு காவல்

உள்ளம் ஒரு கோவில்
உன் உருவம் அதில் தெய்வம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக