பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 16 டிசம்பர், 2014

கண்ணாலே நான் கண்ட கணமே...kannaale naan kanda kaname

கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் வைஜெயந்திமாலா அற்புதமாக காதலை தெரிவிக்கும் விதம் இந்தப் படம் பூராவும் நிறைந்திருந்தாலும் இந்தப் பாடலில் சிறப்பாக இருக்கிறது. அதற்கு இசையும் பாடகர்களின் குரலும் ஒரு விதத்தில்
காரணமாக இருக்கிறது. திரையிசைப் பாடல்கள் என்றால் இது போல இருக்கவேண்டும் அல்லவோ?

திரைப் படம்: பார்த்திபன் கனவு (1960)
இசை: S வேதா
குரல்: A M ராஜா, P சுசீலா
இயக்கம்: D யோகானந்த்
நடிப்பு: ஜெமினி, வைஜெயந்தி மாலா
பாடல்: A மருதகாசி










கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே

எண்ணாத இன்பம் பெண்ணாக வந்து

என்னோடு வாவென்று சொல்லுதே
இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ


கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்றுதானோ

யாரென்று கேட்காததேனோ

யாரானால் என்னென்றுதானோ

நேராக நின்று யார் என்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ

நேராக நின்று யார் என்று கேட்டால்

கூரான வேல் பாயும் என்றோ


யாரான போதென்ன கண்ணே

நானுண்ணும் ஆனந்த தேனே

யாரான போதென்ன கண்ணே

நானுண்ணும் ஆனந்த தேனே

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

நீ வேறு அல்ல நான் வேறு அல்ல

வேறென்ன நான் இன்னும் சொல்ல

இனி என்னாளும் நீ இங்கு எனக்கே

இனி என்னாளும் நீ இங்கு எனக்கே


என் இதயம் எல்லாம் உமக்கே

என் இதயம் எல்லாம் உமக்கே


கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே


இது முன்னாளில் உண்டான உறவோ
இதன் முடிவும் எங்கோ எதுவோ

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

கண்ணாலே நான் கண்ட கணமே
உயிர் காதல் கொண்டதென் மனமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக