பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

சந்தன மலரின் சுந்தர வடிவில் santhana malarin sundara vadivil

எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா (??? B H சசிரேகா) பாடல் என்றாலே தனி சிகம்தான். அதிலும் பி.சுசீலா அம்மா இந்தப் பாடலில் Humming கொடுத்திருக்கிறார். எஸ்.பி.பாலா வின் மிக அமிர்தமான பாடல்களில் இதுவும் ஒன்று. அருமையான இனிமையான சுகமான பாடல்.

திரைப்படம்: கருடா சௌக்கியமா
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் (ஹம்மிங்  - பி.சுசீலா? B H சசிரேகா? )
இயக்கம்: K S பிரகாஷ் ராவ்
பாடல்: தெரியவில்லை
நடிப்பு: சிவாஜி, சுஜாதா.



 





அஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

அஹா ஹா ஹா ஹா ஹா
ஹோ ஹோ ஹோ

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்
சிந்தையில் ஆயிரம் செந்தமிழ் காவியம்
மலர்வதை உணருகிறேன்

மலர்வதை உணருகிறேன்
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்

முத்துச்சரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத்தமிழோ இன்பம் அள்ளித்தருமோ


ஆ ஆ ஆ ஆ ஆ 
 ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

முத்துச்சரமோ மின்னும் நட்சத்திரமோ
பிள்ளைத்தமிழோ இன்பம் அள்ளித்தருமோ
சொர்க்கத்தின் மடிமீது சொந்தங்கள் முடிவாகி
நடப்பது மணமல்லவா
இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி
காண்பது சிறப்பல்லவா
சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்


அஹா ஆகா ஆகா ஹா ஹ ஹ ஹ ஹா 

சொக்கத்தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக்கூந்தலோ என்னைக்கட்டும் கூந்தலோ
சொக்கத்தங்கமோ நான் சொக்கும் தங்கமோ
கட்டுக்கூந்தலோ என்னைக்கட்டும் கூந்தலோ
மன்மதக் கலைவாணன் மார்பினில் விழும் நேரம்
பெண் முகம் சிவக்கின்றது
மங்கள இசை மேகம் மழையென பொழிந்தாலே
உள்ளமே இனிக்கின்றது

சந்தன மலரின் சுந்தர வடிவில்
உனை நான் காணுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக