பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2012

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை


இனிமையான் பாடல் வரிகளுடன் இசை கோர்த்து குரல்கள் அழகாக கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்தி பாடலின் தழுவல்தான்.

திரைப் படம்: நீயா (1979)
பாடியவர்கள்: பி.சுசீலா, எஸ்.பி.பாலசுப்ரமணியம்
நடிப்பு: விஜயகுமார், மஞ்சுளா, கமல்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: துரை
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/16670460-d77



http://www.divshare.com/download/16670624-d51

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
உடலோ அடடா தங்க சுரங்கம்
உலகம் மயங்கும் காதல் அரங்கம்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
தாவும் கரங்கள் தேடும் சுகங்கள்
எது வரை என்றாலும் இன்னும் இன்னும் கொஞ்சம் என்பேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
கலைகள் பயிலும் மாலைப் பொழுது
விடியும் வரையில் நீயும் தழுவு
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
ஆடிக் கலந்து ஆசை கனிந்து
அளித்திடும் இன்பங்கள் என்ன என்ன இன்னும் சொல்வேனோ

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
இதமா சரி தான் காதல் கனி நீ
கனி நீ பதமா காமன் கனி நீ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
பாடும் சுரமோ தேடும் சுகமோ
எதுவென சொன்னாலும் இன்பம் இன்பம் என்னைத் தந்தேனே

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
தமிழ் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை
நம் இதழ் பாடும் சுக ராகம் முடிவதில்லை

உன்னை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பதில்லை
என் இரு விழியோ ஒரு கணமும் இமைப்பதில்லை

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்


மென்மையான பாடல். காணொளியில் மலையாள வரிகளை நீக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது. முழுமையாக இல்லை. ஆனாலும் இனிமையானப் பாடல்.

திரைப் படம்: அந்த 7 நாட்கள்
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: K பாக்கியராஜ், அம்பிகா
இயக்கம்: K பாக்கியராஜ்









சசக நிசபானி ச ச
சச சமகனிச பனி ச ச
நி ச  ச ப ப ப ப பதம  ம ம ம
கமக கம கம நிப க ரி ச நி

ஸப்தஸ்வர தேவியுணரு
இனி என்னில் வரகானமருளு
நீ அழகில் மமனாவில் வாழு-என்
கருவில் ஒளிதீபம் ஏற்று
ஸப்தஸ்வர தேவியுணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்-அது
என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

மனம் கங்கை நதியான உவமை
இனி எங்கே இமை மூடும் நிலைமை

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்தால் காயும்  இந்த
நிலைமை எப்போது மாறும்

என் இளமை மழை மேகம் ஆனால்  உன்
இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது


பாடல் காட்சி வழக்கம் போலதான் என்றாலும் பாடல் வரிகளும் பின்னனி இசையும் இனிமை.

திரைப் படம்: இசை பாடும் தென்றல் (1986)
குரல்கள்: K J யேஸுதாஸ், S ஜானகி
இசை: இளையராஜா
பாடல்: மு மேத்தா
இயக்கம்: S தேவராஜன்
நடிப்பு: சிவகுமார், அம்பிகா




http://www.divshare.com/download/16644926-1ee



http://www.divshare.com/download/16644976-219

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சின்ன சின்ன நூல்களில் பூக்கள் வரைந்தேன்
ஆஹா என்னை வைத்து நான் அதில் பின்னி இருந்தேன்
கைக்குட்டையில் சின்னம் ஒன்று கண்டு பிடித்தேன்
நீ பின்னி வைத்த பூவுக்கு முத்தம் கொடுத்தேன்
காதல் இதயம் கண்டு முடித்தேன்
கண்ணின் இமையால் தந்தி அடித்தேன்
பின்னி முடித்த நூல்களுக்குள் நான் சிக்கி தவித்தேன்
சிக்கி தவித்தேன் சிக்கலெடுத்தேன்

எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் எந்தன் காதலி தந்தது
எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது
நீயா நீயா நீயா நீயா

கைக்குட்டையில் வேர்வையை துடைத்ததில்லை அதற்கு
வலித்திடும் என்று நான் மடித்ததில்லை
உந்தன் கையில் தந்தது துணியும் இல்லை என்
இதயத்தைதான் தந்தேன் வழியும் இல்லை
உன்னை நினைத்தால் உறக்கமில்லை
இன்ப கிளியே இரக்கமில்லை
வாய் திறந்து என் பெண்மை சொல்வது வழக்கமில்லை
பழக்கமில்லை விளக்கமில்லை

அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அன்பு காதலின் சின்னமாய் இந்த காதலி தந்தது
அந்த கைக்குட்டையை யார் எடுத்தது
நான்தான் நான்தான் நான்தான் நான்தான்

புதன், 25 ஜனவரி, 2012

மாலை என்னை வாட்டுது மண நாளை மனம் தேடுது

இன்று மீண்டும் T ராஜேந்தரின் இனிமையானப் பாடல் ஒன்று.

திரைப் படம்: பூக்களைப் பறிக்காதீர்கள்
பாடியவர்கள்: S P B, S ஜானகி
இசை: T ராஜேந்தர்




http://www.divshare.com/download/16638892-ae1



http://www.divshare.com/download/16642412-5a5

மாலை என்னை வாட்டுது

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
விழிவாசல் தேடி நீ கோலம் போட
வாழ்வெல்லாம் கூடி நாம் ராகம் பாட
மயில் உன்னை தழுவ விரும்புகிறேன்
குயில் தனை இழந்து புலம்புகிறேன்
இளமையும் தூங்காதா இல்லை
இதையமும் தூங்காதா
தாகமும் தனியாதா எந்தன்
மோகமும் தீராதா

மாலை என்னை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
உன் கோவில் சேர பூத்திட பூ நான்
உன் நெஞ்சில் ஆட பூஜையும் என்னால்
நினைவினில் ஆடும் என் கண்ணின் ஓரம்
நீ வந்து நின்றால் அது சுகமாகும்
தலைவனை அழைத்திடவா மடியை
தலையணை ஆக்கிடவா
இருகரம் சேர்த்திடவா இல்லை
என்னையே ஏற்த்திடவா

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது
மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ
நாட்கள் நகராதோ
பொழுதும் போகாதோ

மாலை நமை வாட்டுது
மண நாளை மனம் தேடுது

திங்கள், 23 ஜனவரி, 2012

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு


நல்ல பாடல். மறைந்த  திரு மலேஷியா வாசுதேவன் இனிமையாக பாடி இருக்கிறார். கதா நாயகன் ஏதோ தப்பான எண்ணத்துடன் பாடுவது போல படமாக்கி இருக்கிறார் இயக்குனர்.

திரைப் படம்: விடியும் வரைக் காத்திரு (1981)
இயக்கம்: K பாக்கியராஜ்
நடிப்பு: K பாக்கியராஜ், சத்யகலா
இசை: இளையராஜா
குரல்கள்: மலேஷியா வாசுதேவன், S ஜானகி
பாடல்: வாலி



http://www.divshare.com/download/16611560-4f4




நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ம்...என்னாங்க அது
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்

மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
மேகம் மிதக்குது ஆகாயம் மேலே பறக்குது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அது போலவே உன்னை காண நான் அலைபாய்கிறேன்
ல ல ல ல ல ல ல
மழையாக மாறுவேன் மடிமீது சேருவேன்
நீராட்டுவேன் உன் மேனியை
அன்பே உன்னை தினம் அனுபவிப்பேன்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
காணும் கனவுகள் நீ கொண்ட ஆசை நினைவுகள்
ஆ ஆ ஆ ஆ ஆ
என்னென்ன சொல் இன்னாளிலே நிறைவேற்றுவேன்
ல ல ல ல ல ல ல
தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ
வான் மாறலாம் நிலம் மாறலாம்
மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்

நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஷாஜகான் ஒரு தேவதாஸ்
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்
நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு
ஒரு ஜானகி ஒரு கண்ணகி
அது போல தான் உன்னோடு நான்
ஈரேழு ஜென்மம் வர வேண்டும்