பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஜனவரி, 2012

கவிதை அரங்கேறும் நேரம் மலர் கணைகள் பரிமாறும் தேகம்


மென்மையான பாடல். காணொளியில் மலையாள வரிகளை நீக்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது. முழுமையாக இல்லை. ஆனாலும் இனிமையானப் பாடல்.

திரைப் படம்: அந்த 7 நாட்கள்
குரல்கள்: ஜெயசந்திரன், S ஜானகி
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
நடிப்பு: K பாக்கியராஜ், அம்பிகா
இயக்கம்: K பாக்கியராஜ்









சசக நிசபானி ச ச
சச சமகனிச பனி ச ச
நி ச  ச ப ப ப ப பதம  ம ம ம
கமக கம கம நிப க ரி ச நி

ஸப்தஸ்வர தேவியுணரு
இனி என்னில் வரகானமருளு
நீ அழகில் மமனாவில் வாழு-என்
கருவில் ஒளிதீபம் ஏற்று
ஸப்தஸ்வர தேவியுணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
பார்வை உன்பாதம் தேடி வரும்
பாவை என்னாசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்

உன் அங்கம் தமிழோடு சொந்தம்-அது
என்றும் திகட்டாத சந்தம்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

கைகள் பொன்மேனி கலந்து
மலர் பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு

மனம் கங்கை நதியான உவமை
இனி எங்கே இமை மூடும் நிலைமை

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்தால் காயும்  இந்த
நிலைமை எப்போது மாறும்

என் இளமை மழை மேகம் ஆனால்  உன்
இதயம் குளிர் வாடை காணும்

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மிகவும் பிடித்த பாடல் ! நன்றி Sir !

ராஜி சொன்னது…

செம பாட்டு. என் ஃபேவரிட் கலக்‌ஷன்ல இந்த பாட்டும் இருக்குப்பா

கருத்துரையிடுக